Social Icons

Thursday, September 20, 2018

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா? கண்களை பாதுகாக்க இதோ ஒரு செயலி!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பாவனை மேலோங்கி காணப்படுகின்றது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தவறாமல் பயன்படுத்திவரும் ஒரு அன்புச் சாதனம் இன்றைய நவீன கையடக்க தொலைபேசி என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட ஒரு சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன.

உங்கள் மொபைல் போனை Hard Reset செய்வது எப்படி? கற்றுத்தரும் இணையத்தளம்!

உங்கள் மொபைல் போன் வாங்கும் போது எப்படி வேகமாக இயங்கியதோ அதே வேகத்தில் தற்போதும் இயங்க வைக்க வேண்டுமா? வாங்கும்போது எப்படி எளிமையான தோற்றத்தில் இருந்ததோ அதே எளிமையான தோற்றத்திற்கு மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? நினைவகத்தில் எதுவும் சேமிக்கப்படாமல் எப்படி காலியாக இருந்ததோ அதே போன்று மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் உங்கள் மொபைல் போனை ஹார்ட் ரீசெட் (Hard Reset) செய்யுங்கள். ஹார்ட் ரீசெட்டா? அப்டீன்னா? என்னான்னு கேக்குறீங்களா? கவலை வேண்டாம்! அதைதான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்கள் மொபைல் போனுக்கும் “ஐபோன் XS வால்பேப்பர்” வேண்டுமா?

புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றுடன் சேர்த்து பல அழகிய வால்பேப்பர்கள் வருவதும் வழமை.
அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், மற்றும் ஐபோன் XR போன்றவற்றில் வழங்கப்பட்டுள்ள வால்பேப்பர்களை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அந்த வால்பேப்பர்களை நாம் கீழே வழங்கியுள்ளோம்.இவற்றை டவுன்லோட் செய்து உங்களது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது விண்டோஸ் போன் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

Monday, September 17, 2018

நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்! ஒரு சுவாரஷ்யமான இணையத்தளம்

நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை எத்தனை நாட்கள் வாழ்ந்து உள்ளீர்கள்? என கேட்டால் கூற முடியுமா? கொஞ்சம் சிரமத்துடன் கணித்துக் கூற முடியும் அல்லவா?
ஆனால்… நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்றுவரை உங்கள் இதயம் எத்தனை தடவை துடித்துள்ளது? எத்தனை முறை சுவாசித்து உள்ளீர்கள்? சந்திரன் உலகை எத்தனை தடவைகள் சுற்றியுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு மனதால் கணித்து விடை கூறுவது சற்று சிரமாமான காரியமே. எனவே மேற்குறிப்பிட்டது போன்ற சில சுவாரஷ்யமான கேள்விகளுக்கு உடனடியாக விடையை தருகின்றது கீழுள்ள இணையத்தளம்.

டூயல் சிம் வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR

கடந்த 2018 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் இடம்பெற்ற ஆப்பிளின் வருடாந்த விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் உட்பட மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் எக்ஸ் எனும் ஐபோனை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த வருடம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மாடலின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆவலாக இருந்தது.
அந்தவகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்களுக்கு “ஐபோன் XS,” “ஐபோன் XS மேக்ஸ்” மற்றும் “ஐபோன் XR” என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தனை வசதிகளையும் தருகிறது இந்த ஸ்மார்ட்போன் கீபோர்ட்!

எமது ஸ்மார்ட் போனில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய நாம் ஏராளமான செயலிகளை பயன்படுத்தி இருப்போம் அல்லவா?
அவற்றுள் சில செயலிகள் ஒலிப்பு முறையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் கையெழுத்தை டிஜிட்டல் தமிழ் எழுத்துக்களாக மாற்ற சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் குரல் மூலம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும். ஆனால் இவைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே செயலியில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும். அருமையாக இருக்கும் அல்லவா?
மேற்கூறிய அனைத்தையும் ஒரே கீபோர்ட் செயலியில் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் பயன்படுத்துங்கள் ஜிபோர்ட் கீபோர்ட் செயலியை. இதனை கீழே உள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கலாம்.

ஆண்ட்ராய்டு பை வால்யூம் கண்ட்ரோலரை உங்கள் போனிலும் பயன்படுத்தலாம்!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது “ஆண்ட்ராய்டு பை” எனும் இயங்குதளமாகும் (2018.)
ஆண்ட்ராய்டு ஓரியோ எனப்படும் அதன் முன்னைய பதிப்பை விட பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இந்த புதிய பதிப்பில் வால்யூம்-ஐ கூட்டிக் குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வசதியானது பார்பதற்கு அழகாகவும் பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுத் தோற்றத்துடன் 10 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் கூகுள் குரோம்

நீங்களும் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
கூகுள் குரோம் இணைய உலாவி அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது 10 வருடங்கள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு கூகுள் குரோம் இணைய உலாவியின் 69 ஆம் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பை நிறுவிக்கொள்வதன் மூலம் குரோம் உலாவியின் புதிய தோற்றத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் மொழிக்கு கூகுள் தரும் மற்றுமொரு அருமையான வசதி!

இணைய ஜாம்பவான் கூகுள் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளது.
தமிழ் மொழியை தட்டச்சு செய்வது, உச்சரிப்பது, குரலை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, கையெழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, இணைய இணைப்பின்றி தமிழ் மொழியை ட்ரான்ஸ்லேட் செய்வது, மற்றும் புகைப்படங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை உணர்ந்து அதை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவதுஉட்பட இன்னும் பல வசதிகளை தமிழ் மொழிக்கும் வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

 
Blogger Tricks
 
Blogger tips