Social Icons

Showing posts with label Medical. Show all posts
Showing posts with label Medical. Show all posts

Thursday, September 20, 2018

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா? கண்களை பாதுகாக்க இதோ ஒரு செயலி!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பாவனை மேலோங்கி காணப்படுகின்றது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தவறாமல் பயன்படுத்திவரும் ஒரு அன்புச் சாதனம் இன்றைய நவீன கையடக்க தொலைபேசி என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட ஒரு சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன.

Monday, July 18, 2016

தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்

ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன் செயல்படும். எனவே இரவில் தூங்க முடியவில்லை என்பவர்கள் கீழ்கண்ட எளிய வழிகளைப் பின்பற்றுவது நல்லது இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்

Wednesday, April 13, 2016

facebook - ல சொன்ன மந்திர தந்திரங்கள்

தொகுப்பு: MJM Razan
கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது. அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும். காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது. பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும்.

Sunday, April 10, 2016

எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா?

தொகுப்பு: MJM Razan
வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது நெல்லிக்காய் சாறு அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் "சி', உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் இச்சாறுகள் அவசியமானவை. வைட்டமின் "சி' சத்து ஈறுகளை பன்மடங்கு பலப்படுத்தும் சக்தி கொண்டது. தேனில் உள்ள நற்குணங்கள் வாயை சுத்தமாக வைக்க உதவும். இவற்றை காலையில் அருந்துவதில் தவறு இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை பலர் மறந்து விடுகின்றனர். அதாவது இந்த சாறுகளில் அமிலத்தன்மை குறிப்பிடும் அளவிற்கு உள்ளது.

இந்த ஜூஸ் குடிச்சா நீங்க வெள்ளையாயிடுவிங்க

தொகுப்பு: MJM Razan
கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும். தனால் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும். ஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது. இதில் தற்போது ஏராளமானோர்....

எலுமிச்சையின் நன்மைகள்

தொகுப்பு: MJM Razan
எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல. மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல. அது ஒரு உயிரூட்டமான கனி. கனிகளில் பறித்த பின்னும் உயிரூட்டமாக இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. எலுமிச்சைப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் சக்திகள் அளப்பரியது. இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாதது. மேலும் எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து.....

Saturday, April 9, 2016

இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?

தொகுப்பு: MJM Razan
இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா? வறுமையில் வாடுகிற பலருக்கும் பல நாட்கள், பல வேளைகள் பசியாற்றுகிற உணவு வாழைப்பழம். இது ஒரு பக்கமிருக்க, வயிறு முட்ட விருந்தே உண்டாலும், கடைசியாக ஒரு வாழைப்பழத்தை உள்ளே தள்ளினால்தான் திருப்தியாகிறவர்கள் இன்னொரு பக்கம். இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் அனேகம் பேருக்கு உண்டு. மலச்சிக்கலுக்கு அதுதான் மருந்து என்பது காலங்காலமாக மக்களிடம் பதிந்து போன எண்ணம். இது சரியா? தெளிவுப்படுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.

Tuesday, April 5, 2016

சிகப்பு உணவுகள் பற்றி அறியாத உண்மைகள் !!!

தொகுப்பு: MJM Razan
சிவப்பு உணவுகளினால் நீரிழவு, இரத்த அழுத்தம், இவற்றின் காரணங்களால் ஏற்படும் மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.
1.தினமும் ஒரு ஆப்பிள் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க உதவும் என்பார்கள். இதில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்டுகள், நார்ச்சத்து போன்றவை நீரிழிவு, நுரையீரல், பெருங்குடல், மார்பக, கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் பயனளிக்கிறது.

Monday, April 4, 2016

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தொகுப்பு: MJM Razan

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!! தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது. முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

Sunday, April 3, 2016

காலையில் எழும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள்.

தொகுப்பு: MJM Razan

காலையில் எழும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள்.
தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். இதுகுறித்து ஆன்மீக குரு மோகன்ஜி கூறுவதாவது, காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 17, 2016

புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பித்தவுடன் ஏற்படும் உடனடி பலன்கள்

தொகுப்பு: MJM Razan

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

* புகை பிடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றது. பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் சிகரெட் மூட்டு வலி சர்க்கரை நோய் 2 இவற்றுடனும் தொடர்பு உடையது. அதிக சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் 2 வகை ஏற்படும் வாய்ப்பு வெகுவாய் அதிகரிக்கின்றது.

Tuesday, January 12, 2016

Sugar (சர்க்கரை) நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது?


தொகுப்பு: R.MOHAMED SAFATH

தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்

தொகுப்பு: MJM Razan
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் கொல்லி “காட்டு ஆத்தாப்பழம்”..!

தொகுப்பு: MJM Razan
நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

Sunday, January 10, 2016

வாய் துர்நாற்றமா அபோ இதை கண்டிப்பா படித்துவிட்டு:-ஷேர் செய்யுங்கள்

தொகுப்பு: MJM Razan
பல் வலியை சரிசெய்ய கூடியதும், வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும், பித்தத்தை சமன்படுத்த கூடியதும், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லதுமான காட்டு ஏலக்காய் குறித்து நாம் பார்ப்போம். ஏலத்தின் வகையை சேர்ந்தது காட்டு ஏலம். இது உள் உறுப்புகளை தூண்டக்கூடிய மருந்தாகிறது. வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

Thursday, October 1, 2015

சுவையான சத்தான கேரட் சட்னி

தொகுப்பு: MJM Razan

தேவையான பொருட்கள்:

கேரட் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 6
புளி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
கடுகு, உளுந்து – தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு

கொழுப்பை கரைக்கும் வெங்காயம்!

தொகுப்பு: MJM Razan
உணவுகளில் வெங் காயத்துக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் வெங்காய சட்னி, வெங்காய சாம்பார், வெங்காய பச்சடி, வெங்காய வடகம் என வெங்காய உணவுகளின் பட்டி யல் நீள்கிறது. வெங்காயத்தில் வைட்டமின் `சி’ சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் `சி’ சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்பதன் மூலம் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். வெங்காயம் ஒரு நச்சுக் கிருமி கொல்லியாக பயன்படுகிறது. உதாரணமாக, அம்மை மற்றும் காலரா பரவும் காலங்களில் வீடுகளைச் சுற்றிலும் சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்தால் அந்த நச்சுக்கிருமிகளை உள்ளிழுத்து, நோய்களிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை படைத்தது. மேலும் உடலை மெலிதாக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தை தணிக்கவும், மூளை சுறுசுறுப்படையவும் செய்கிறது வெங்காயம். இதுதவிர கொழுப்புச்சத்தை கரைத்து வயிற்றுக்கட்டிகளை நீக்கக்கூடியது.

Thursday, August 13, 2015

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்!!!

தொகுப்பு: MJM Razan
புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்…

Wednesday, July 22, 2015

உணவிலுள்ள கலோரிகளை துல்லியமாகச் சொல்லும் அப்பிளிக்கேஷன்

தொகுப்பு: MJM Razan
மொபைல் சாதனங்களின் உதவியுடன் எடுக்கப்படும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு உணவுகளிலுள்ள கலோரிகளின் அளவை துல்லியமாக சொல்லக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Al எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் முதலில் உணவின் வகையினை அறிந்து கொள்வதுடன் அதற்கு அடுத்தபடியாக உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு கலோரிகளின் அளவை கண்டறிகின்றது.
 
Blogger Tricks
 
Blogger tips