Social Icons

Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Sunday, October 21, 2018

இணைய வேகத்தை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும் இன்டர்நெட் ஸ்பீட் மீட்டர்

இணையம் பயன்படுத்தப்படாத ஸ்மார்ட்போன்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து மொபைல் போன்களிலும் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நாம் எமது ஸ்மார்ட்போனுடன் இணையத்தை தொடர்பு படுத்தி வைத்திருக்கும் போது எம்மை அறியாமலேயே சில செயலிகள் இணையத்துடன் தொடர்பு படுத்தப் படலாம்.

இவ்வாறு எம்மை அறியாமலேயே செயலிகள் இணையத்துடன் தொடர்பு படுவதால், எம்மை அறியாமலேயே இணைய பாவனை அதிகரித்து நாம் இணையத்துக்காக செலவு செய்யும் பணத் தொகை அதிகரிக்க நேரிடும்.

Monday, October 1, 2018

உங்களது ஆன்லைன் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்குமா? அறிவது எப்படி?

இணையம் என்பது இன்று அனைவராலும் சர்வ சாதரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணையம் இன்றி ஒரு நாளை களிப்பது கூட சிரமமாக மாறிவிட்டது. அப்படித்தானே?
எனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற ஏராளமான தளங்களில் நாம் எமக்கென்று கணக்குகளை உருவாக்கி அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம்.
அவ்வாறான தளங்களில் எமது இரகசிய தனிப்பட்ட தகவல்களை கூட பதிந்து வைத்திருப்போம் அல்லவா? ஆகவே அண்மையில் 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதுபோல் ஏனைய தளங்களும் அன்றாடம் இணைய வழி தாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றன. அவ்வாறான தாக்குதல்களை இனங்கண்டு அவற்றுள் உங்களது தகவல்களும் கசிந்திருக்குமா? என்பதை அறிய உதவுகின்றது நாம் கீழே பார்க்கும் இணையத்தளம்.

கடந்த காலங்களில் உலகளாவியரீதியில் இடம்பெற்ற மி

ஒரு இணையதளத்தை ஆண்ட்ராய்டு போனில் தடை செய்வது எப்படி?

இன்று இணையதளங்களை உலா வருவதற்காக கணினியை விட ஸ்மார்ட் போன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை மிக இலகுவாக பயன்படுத்த முடிவதால் எம்மைப் போன்று எமது சிறார்களும் இணையதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களது கற்றல் தேவைகளுக்காக ஏராளமான இணையதளங்கள் இருக்கும் அதேநேரம், அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக் கூடிய இணையதளங்களும் கூடவே இருக்கின்றன.

Thursday, September 20, 2018

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா? கண்களை பாதுகாக்க இதோ ஒரு செயலி!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பாவனை மேலோங்கி காணப்படுகின்றது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தவறாமல் பயன்படுத்திவரும் ஒரு அன்புச் சாதனம் இன்றைய நவீன கையடக்க தொலைபேசி என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட ஒரு சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன.

உங்கள் மொபைல் போனை Hard Reset செய்வது எப்படி? கற்றுத்தரும் இணையத்தளம்!

உங்கள் மொபைல் போன் வாங்கும் போது எப்படி வேகமாக இயங்கியதோ அதே வேகத்தில் தற்போதும் இயங்க வைக்க வேண்டுமா? வாங்கும்போது எப்படி எளிமையான தோற்றத்தில் இருந்ததோ அதே எளிமையான தோற்றத்திற்கு மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? நினைவகத்தில் எதுவும் சேமிக்கப்படாமல் எப்படி காலியாக இருந்ததோ அதே போன்று மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் உங்கள் மொபைல் போனை ஹார்ட் ரீசெட் (Hard Reset) செய்யுங்கள். ஹார்ட் ரீசெட்டா? அப்டீன்னா? என்னான்னு கேக்குறீங்களா? கவலை வேண்டாம்! அதைதான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

Monday, September 17, 2018

டூயல் சிம் வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR

கடந்த 2018 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் இடம்பெற்ற ஆப்பிளின் வருடாந்த விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் உட்பட மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் எக்ஸ் எனும் ஐபோனை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த வருடம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மாடலின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆவலாக இருந்தது.
அந்தவகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்களுக்கு “ஐபோன் XS,” “ஐபோன் XS மேக்ஸ்” மற்றும் “ஐபோன் XR” என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தனை வசதிகளையும் தருகிறது இந்த ஸ்மார்ட்போன் கீபோர்ட்!

எமது ஸ்மார்ட் போனில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய நாம் ஏராளமான செயலிகளை பயன்படுத்தி இருப்போம் அல்லவா?
அவற்றுள் சில செயலிகள் ஒலிப்பு முறையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் கையெழுத்தை டிஜிட்டல் தமிழ் எழுத்துக்களாக மாற்ற சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் குரல் மூலம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும். ஆனால் இவைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே செயலியில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும். அருமையாக இருக்கும் அல்லவா?
மேற்கூறிய அனைத்தையும் ஒரே கீபோர்ட் செயலியில் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் பயன்படுத்துங்கள் ஜிபோர்ட் கீபோர்ட் செயலியை. இதனை கீழே உள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கலாம்.

ஆண்ட்ராய்டு பை வால்யூம் கண்ட்ரோலரை உங்கள் போனிலும் பயன்படுத்தலாம்!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது “ஆண்ட்ராய்டு பை” எனும் இயங்குதளமாகும் (2018.)
ஆண்ட்ராய்டு ஓரியோ எனப்படும் அதன் முன்னைய பதிப்பை விட பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இந்த புதிய பதிப்பில் வால்யூம்-ஐ கூட்டிக் குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வசதியானது பார்பதற்கு அழகாகவும் பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுத் தோற்றத்துடன் 10 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் கூகுள் குரோம்

நீங்களும் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
கூகுள் குரோம் இணைய உலாவி அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது 10 வருடங்கள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு கூகுள் குரோம் இணைய உலாவியின் 69 ஆம் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பை நிறுவிக்கொள்வதன் மூலம் குரோம் உலாவியின் புதிய தோற்றத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் மொழிக்கு கூகுள் தரும் மற்றுமொரு அருமையான வசதி!

இணைய ஜாம்பவான் கூகுள் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளது.
தமிழ் மொழியை தட்டச்சு செய்வது, உச்சரிப்பது, குரலை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, கையெழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, இணைய இணைப்பின்றி தமிழ் மொழியை ட்ரான்ஸ்லேட் செய்வது, மற்றும் புகைப்படங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை உணர்ந்து அதை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவதுஉட்பட இன்னும் பல வசதிகளை தமிழ் மொழிக்கும் வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

யூடியூப் இல் எவ்வளவு நேரம் செலவழித்துள்ளீர்கள்: யூடியூப் ஆப் இன் புதிய வசதி!

ஒரு நாளில் இருக்கக்கூடிய 24 மணி நேரங்களில் ஒரு சில மணி நேரங்களை இன்று இணையத்துக்காக ஒதுக்க வேண்டிய தேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை எடுத்துப் பார்த்தால் பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இணையத்தளங்களுக்கு என நாம் அதிகமான நேரத்தை கொடுத்திருப்போம்.
எனவே எமது பொன்னான நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள இன்று பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் எமக்கு துணையாக நிற்கின்றன.

அனுப்பிய இமெயிலை தானாக அழிய வைப்பது எப்படி? (ஜிமெயில்: ஸ்மார்ட் போன்)

கூகுளால் நிர்வகிக்கப்படும் ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையானது இன்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரும் மின்னஞ்சல் சேவையாகும்.
இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன் சாதனங்கள் உட்பட கணினிகளின் ஊடாகவும் பயன்படுத்த முடியும்.
இந்த சேவையில் அடிக்கடி பல புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனம், அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலை உடனடியாக தடுத்துக் கொள்வதற்கான வசதியையும் அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஜிபி வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது (APK டவுன்லோட்)

ஜிபி வாட்ஸ்அப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர் எனின் ஜிபி வாட்ஸ்அப் பற்றி நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் செயலியை விட இது பல மடங்கு வசதிகளை தருகின்றது.
நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலிக்கு பதிலாகவும் இதனை பயன்படுத்தலாம், அல்லது மற்றுமொரு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்துவதற்காகவும் இந்த செயலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளலாம்.

பழைய போட்டோவை டிஜிட்டல் போட்டோவாக மாற்ற உதவும் செயலி

திருமண வைபவங்கள், பிறந்தநாள் விழாக்கள், சுற்றுலா பயணங்கள் போன்ற சந்தோசமான தருணங்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் ஏற்படுவதுண்டு.
அவ்வாறான சந்தர்பங்களில் நாம் எமது மொபைல் போன் மூலமோ அல்லது கேமரா மூலமோ பிடிக்கக்கூடிய புகைப்படங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் சாதனங்களில் சேமித்து வைக்கின்றோம் அல்லவா?
ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அவ்வாறு சேமிக்கும் வசதி இருக்கவில்லை. எனவே அவைகள் பௌதீக வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன.
எனவே அவ்வாறு பௌதீக வடிவில் இருக்கும் புகைப்படங்களை டிஜிட்டல் புகைப்படங்களாக மாற்றிக்கொள்ள உதவுகிறது கூகுள் தரும் அப்ளிகஷன். (இதன் பதிவிறக்க இணைப்பும் இங்கே வழங்கப்பட்டுள்ளது.)

Thursday, October 1, 2015

உள்ளங்கையில் ஒரு வழிகாட்டி!

தொகுப்பு: MJM Razan
உள்ளங்கைக்குள் உலகத்தையே அடக்கிவிட்டது செல்போன்கள். எந்த நாட்டில் இருப்பவர்களுடனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். தந்தியில் சொல்ல வேண்டிய செய்திகளை எஸ்.எம்.எஸ். மூலம் நொடியில் சொல்லி விடலாம். இது மட்டும்தான் செல்போன்களின் பயனா? இல்லை. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர வளர செல்போனுக்குள்ளும் பல வசதிகள் வந்துவிட்டன. அதில் முதன்மையானது அப்ளிகேஷன்ஸ்.
 இன்று ஆண்ட்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். எனவே அதற்கேற்ப நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அப்ளிகேஷன்களையும் உருவாக்கி வருகிறார்கள். இவற்றை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ். அந்த வகையில் மக்களுக்கு பயன்படும் சில அப்ளிகேஷன்ஸ் குறித்து பார்ப்போம். இது முழுமையான டேட்டா அல்ல.

Sunday, August 9, 2015

மைக்ரோசொஃப்ட் அறிமுகப்படுத்தும் மொழிபெயர்ப்பு செயலி

தொகுப்பு: MJM Razan
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு செயலியை (Translater App) அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுளில் 27 மொழிகளுக்கு மாத்திரமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும். மைக்ரோசொஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆண்ட்ரோய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது. போன், டேப்லட், அப்பிள் வோட்ச், ஸ்மார்ட் வோட்ச் போன்றவற்றில் இதைப் பயன்படுத்த முடியும்.

Wednesday, July 22, 2015

USB காக விற்பனைக்கு வரும் Windows 10

தொகுப்பு: MJM Razan
மைக்ரோசொப்ட் நிறுவனம் இம் மாத இறுதியில் தனது புதிய இயங்குதளப் பதிப்பான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கமாக இறுவட்டுக்களில் (CD / DVD) விற்பனைக்கு விடப்படும் இயங்குதளமானது தற்போது USB சாதனங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

உணவிலுள்ள கலோரிகளை துல்லியமாகச் சொல்லும் அப்பிளிக்கேஷன்

தொகுப்பு: MJM Razan
மொபைல் சாதனங்களின் உதவியுடன் எடுக்கப்படும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு உணவுகளிலுள்ள கலோரிகளின் அளவை துல்லியமாக சொல்லக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Al எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் முதலில் உணவின் வகையினை அறிந்து கொள்வதுடன் அதற்கு அடுத்தபடியாக உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு கலோரிகளின் அளவை கண்டறிகின்றது.

Sunday, June 28, 2015

அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி

தொகுப்பு: MJM Razan
இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற நினைத்தால், அது முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போமா. முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும. அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும். அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.
 
Blogger Tricks
 
Blogger tips