Social Icons

Monday, November 24, 2014

எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத Samsung Galaxy S5

தொகுப்பு:ALM.SAFRAS
முந்தைய S4 கைபேசி  1,60, 00 000 (1.6 கோடி) ​உலகம் முழுவதும் ​விற்பனை ஆனது. ஆனால் S5 1.2 கோடி எண்ணிக்கை அளவிலேயே விற்பனையானது. இது சாம்சங் நிறுவனம் தனக்குத் தானே வைத்த விற்பனை இலக்கை விட 40% குறைவு. இதனால், தனது நிறுவனத்தின் மேலாண்மை பணியிடங்களில் உள்ளவர்களின் பொறுப்புக்களை மாற்றியமைத்துள்ளது.  வீட்டு வசதி பொருட்கள், தொலைகாட்சி என அனைத்தையும் ஒருவரே மேலாண்மை செய்வதை மாற்றி கைபேசிக்கு என்றே ஒரு தனி குழுவை ஏற்படுத்தியுள்ளது சாம்சங். J. K . சின்  அந்தக் குழுவிற்கு தலைவராக இனி இருப்பார்.

என்ன தான், கைபேசி சந்தையில் முதலிடத்தில் இருந்தாலும். வட அமெரிக்கா தவிர்த்து முக்கிய சந்தையான சீனா போன்றவற்றில் கேலக்சி S5 சரியாக விற்பனையாகாதது நிறுவன அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது. ஏகப்பட்ட Galaxy மாடல்கள் இருப்பது மக்களை குழப்பமடையச் செய்வதாக உள்ளதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மாடல்களின் எண்ணிக்கையையும், விலையையும் குறைத்தால் ஒழிய தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது சாம்சங்குக்கு கடினமே

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips