தொகுப்பு:ALM.SAFRAS
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் போல்ட் தொடரில் மற்றொரு ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸ் போல்ட் AD4500 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
போல்ட் AD4500 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரவு வழங்குகிறது. இது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் RAM 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் (அறியப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் AD4500 ஸ்மார்ட்போனில் ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பினபுற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. போல்ட் AD4500 ஸ்மார்ட்போனில் 4GB உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது, ஆனால் மைக்ரோ SD அட்டை வழியாக விரிவாக்கத் திறன் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. சாதனத்தில் ஒரு 2000mAh பேட்டரி, Wi-Fi, ப்ளூடூத் மற்றும் டூயல் ஸ்பீக்கர்ர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் மூன்றாம் தரப்பு விற்பனையாளர் ஈபே மூலம் ரூ. 5,290 விலையில் கிடைக்கிறது. வியாழக்கிழமை மும்பையை தளமாக கொண்ட விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் போல்ட் AD4500 சில குறிப்புகள் பகிர்ந்து கொண்டுள்ளது, அதேவேளை சந்தையின் விலை ரூ. 5,249 மற்றும் எம்ஆர்பி ரூ.6,599 விலையிலும் அறிவித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் AD4500 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
- 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
- RAM 512MB,
- 1.3GHz டூயல் கோர் (அறியப்படாத சிப்செட்) ப்ராசசர்,
- 5 மெகாபிக்சல் பினபுற கேமரா,
- 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
- Wi-Fi,
- ப்ளூடூத்
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
- 2000mAh பேட்டரி.
No comments:
Post a Comment