இணையம் என்பது இன்று அனைவராலும் சர்வ சாதரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணையம் இன்றி ஒரு நாளை களிப்பது கூட சிரமமாக மாறிவிட்டது. அப்படித்தானே?
எனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற ஏராளமான தளங்களில் நாம் எமக்கென்று கணக்குகளை உருவாக்கி அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம்.
அவ்வாறான தளங்களில் எமது இரகசிய தனிப்பட்ட தகவல்களை கூட பதிந்து வைத்திருப்போம் அல்லவா? ஆகவே அண்மையில் 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதுபோல் ஏனைய தளங்களும் அன்றாடம் இணைய வழி தாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றன. அவ்வாறான தாக்குதல்களை இனங்கண்டு அவற்றுள் உங்களது தகவல்களும் கசிந்திருக்குமா? என்பதை அறிய உதவுகின்றது நாம் கீழே பார்க்கும் இணையத்தளம்.



















