அண்மையில் மூன்று கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்திய சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ஞாபகம் இருக்கிறதா? இல்லை இல்லை, மூன்று கேமராக்கள் போதாது என நீங்கள் கருதினால், இதோ! நான்கு கேமராக்களுடன் “சாம்சங் கேலக்ஸி ஏ9”எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகின்றது சாம்சங் நிறுவனம். உலகில் முதலாவது குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Sunday, October 21, 2018
கூகுள் அறிமுகப்படுத்தும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள்

கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி நியூயார்க்கில் இடம்பெற்ற கூகுளின் நிகழ்வில் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள், பிக்சல் ஸ்லேட் குரோம்புக், மற்றும் கூகுள் ஹோம் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அந்தவகையில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஆகிய இரு புதிய ஸ்மார்ட்போன்களும் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஆகும்.
பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL
Monday, October 1, 2018
5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன!
ஃபேஸ்புக் தளத்தில் இருந்த ஒரு குறைபாடு காரணமாக 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த குறைபாடு கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் மற்றும் ஜே 4 பிளஸ் | இன்ஃபினிடி திரை | கிளாஸ் பேக்
ஸ்மார்ட் போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜே 4 பிளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே 6 மற்றும் ஜே 4 ஸ்மார்ட் போன்களை விட சற்று மேம்படுத்தப்பட்ட அம்சங்களை இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன.
Tuesday, September 25, 2018
மூன்று பின்புற கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்மார்ட் போன்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய சூடு தணியும் முன்னரே சாம்சங் கேலக்ஸி ஏ7 எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம். பின்புறம் 3 கேமராக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும். ஒன்று பின்புறக் கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்புறம் வழங்கப்பட்டுள்ள கேமராக்களில் 8 மெகாபிக்சல் 24 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் தெளிவு திறன்களைக் கொண்ட கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டுள்ள 8 மெகாபிக்சல் கேமரா 120 பாகை கோணத்தில் புகைப்படங்களை எடுக்க கூடியதாகும். இது மனிதனுடைய கண்களுக்கு புலப்படக்கூடிய கோணத்திற்கு நிகரானதாகும்.
Monday, September 17, 2018
நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்! ஒரு சுவாரஷ்யமான இணையத்தளம்
நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை எத்தனை நாட்கள் வாழ்ந்து உள்ளீர்கள்? என கேட்டால் கூற முடியுமா? கொஞ்சம் சிரமத்துடன் கணித்துக் கூற முடியும் அல்லவா?
ஆனால்… நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்றுவரை உங்கள் இதயம் எத்தனை தடவை துடித்துள்ளது? எத்தனை முறை சுவாசித்து உள்ளீர்கள்? சந்திரன் உலகை எத்தனை தடவைகள் சுற்றியுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு மனதால் கணித்து விடை கூறுவது சற்று சிரமாமான காரியமே. எனவே மேற்குறிப்பிட்டது போன்ற சில சுவாரஷ்யமான கேள்விகளுக்கு உடனடியாக விடையை தருகின்றது கீழுள்ள இணையத்தளம்.
Thursday, April 28, 2016
யார் இந்த, சாகீர் நாயக்...?
உலகத்தின் சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் போன்ற எத்துறையாகவும் இருக்கலாம். இவ்வாறான பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய சமூகத்தால் மறந்து போய் விட்டாலும், அனைத்துலக நாடுகளாலும் கௌரவிக்கப்பட்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் தான் டாக்டர் சாகீர் நாயக் ஆவார். இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக மையமான மும்பையில் 1965ல் சாகீர் அப்துல் கரீம் நாயக் அவர்களுக்கு பிறந்தவர் தான் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஆகும். தனது பாடசாலை கல்வியை St பீட்டர்ஸ் உயர் தரப்பாடசாலையிலும் Kishinchand செல்லரம்...
Wednesday, April 6, 2016
உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம்
இந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. சிலர் இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்டிருப்பார்கள், சிலர் உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பார், சிலர் எதை பற்றியும் துளியும் அக்கறையின்றி நான், என் வாழ்க்கை என்று இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…
Tuesday, April 5, 2016
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் முதல் நாள் இரவே, அடுத்த நாள் சமையலை அவர்களுடன் சேர்ந்தே திட்டமிடுங்கள். குளித்தல் உள்ளிட்ட அன்றாடக் கடமைகளைச் செய்து முடித்து, குழந்தைக்குப் பசித்த பிறகு உணவு தரலாம். வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். பாலுடன் கார்ன் ஃபிளேக்ஸ், அரை வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
உங்கள் பெயரில் உள்ள ரகசியம் தெரிஞ்சிகோங்க
உங்கள் பெயர் உங்களின் பெர்சனாலிட்டியை வலுமிக்க வகையில் தாக்கும். உங்கள் பெயரின் முதல் எழுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், வாழ்க்கையில் உங்கள் திறனை பற்றியும் வெளிப்படுத்தும். உங்கள் தேர்வுகளை உறுதிபடுத்தும் சக்தியும், உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகளும் உங்கள் பெயருக்கு உள்ளது.
A.A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
A.A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
Thursday, January 28, 2016
Tuesday, January 12, 2016
தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Monday, January 4, 2016
குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் Apps
தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடித்து சொல்லிவிடும் இந்த மொபைல் 'Apps'. இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த 'ஆப்' 100-க்கும் மேற்பட்ட புதிதாய் பிறந்த குழந்தைகளின் அழுகையை பதிவு செய்திருக்கிறது.பல்வேறு நேரங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த 'Apps ' குழந்தை ஏன் அழுகிறது என்பதை தீர்மானிக்கிறது.
கூகுள் என்று பெயர் இடப்பட்ட காரணம் தெரியுமா?
கூகுள் 1996ம் வருடம் ஜனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணிதத்தொடர்பு) முடிவில் தோன்றியதாகும்.
Saturday, December 12, 2015
இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம்
இணையமில்லா சேவைகளை கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்பு மெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத தருணத்திலோ முகநூலில் செய்திகளை எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை பெற்றவுடன் முகநூளில் வெளியிடப்படும்.
Thursday, November 26, 2015
நானோ தொழில்நுட்பத்தின் அதிநவீன கண்டுப்பிடிப்புகள்
100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவில் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தும் கருவிகள் அல்லது பொருட்கள் நானோ கருவிகள் எனப்படும். அது போன்ற பொருள்களை உருவாக்கும் நுட்பவியல் தான் நானோ தொழில்நுட்பம் (NanoTechnology) எனப்படுகிறது.
1975-ஆம் ஆண்டு வரை நானோ தொழில்நுட்பம் என்று ஒரு துறை இல்லவே இல்லை என்ற போதிலும், நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் அபாரமானது.
Tuesday, October 27, 2015
புதிய அம்சங்களைக் கொண்ட மைக்ரோசாஃப்ட் பேண்ட் அறிமுகம்
உலகின் முன்னணி கணினி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது புதிய தயாரிப்பாக கையில் அணியும் பேண்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பேண்ட் என்று அழைக்கப்படும் இது கடந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விடவும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மைக்ரோசாஃப்ட் பேண்ட் நம்முடைய அன்றாட வேலைகளை நினைவுபடுத்தும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய பிட்னஸ் சம்பந்தமான செயல்களையும் கணக்கிட முடியும்.
Thursday, October 1, 2015
உள்ளங்கையில் ஒரு வழிகாட்டி!
உள்ளங்கைக்குள் உலகத்தையே அடக்கிவிட்டது செல்போன்கள். எந்த நாட்டில் இருப்பவர்களுடனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். தந்தியில் சொல்ல வேண்டிய செய்திகளை எஸ்.எம்.எஸ். மூலம் நொடியில் சொல்லி விடலாம். இது மட்டும்தான் செல்போன்களின் பயனா? இல்லை. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர வளர செல்போனுக்குள்ளும் பல வசதிகள் வந்துவிட்டன. அதில் முதன்மையானது அப்ளிகேஷன்ஸ்.
இன்று ஆண்ட்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். எனவே அதற்கேற்ப நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அப்ளிகேஷன்களையும் உருவாக்கி வருகிறார்கள். இவற்றை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ். அந்த வகையில் மக்களுக்கு பயன்படும் சில அப்ளிகேஷன்ஸ் குறித்து பார்ப்போம். இது முழுமையான டேட்டா அல்ல.
இன்று ஆண்ட்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். எனவே அதற்கேற்ப நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அப்ளிகேஷன்களையும் உருவாக்கி வருகிறார்கள். இவற்றை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ். அந்த வகையில் மக்களுக்கு பயன்படும் சில அப்ளிகேஷன்ஸ் குறித்து பார்ப்போம். இது முழுமையான டேட்டா அல்ல.
Thursday, September 10, 2015
Sunday, August 16, 2015
உங்கள் Facebook பக்கத்தை யார்? பார்கிறார்கள் என்று தெரியனுமா?
உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய Facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- னை கிளிக் செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)