Social Icons

Monday, September 17, 2018

டூயல் சிம் வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR

கடந்த 2018 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் இடம்பெற்ற ஆப்பிளின் வருடாந்த விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் உட்பட மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் எக்ஸ் எனும் ஐபோனை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த வருடம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மாடலின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆவலாக இருந்தது.
அந்தவகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்களுக்கு “ஐபோன் XS,” “ஐபோன் XS மேக்ஸ்” மற்றும் “ஐபோன் XR” என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் ஐபோன்களில் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் x, ஐபோன் 8 , மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஏ12 பயோனிக் சிப்செட்-ஐ விட 15% வேகமாக இயங்கக் கூடியதாகும்.
தொடர்புடைய இடுகை: 512 மெமரியுடன் அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் கேலக்சி நோட் 9
மேலும் புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ள ஏ12 பயோனிக் சிப்செட் ஆனது முன்னைய பதிப்பை விட 50% குறைவான மின்சக்தியையே பயன்படுத்தத்தக் கூடியதாகும். இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும்.
அத்துடன் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR போன்றவற்றின் திரைகள் முறையே 5.8 அங்குலம், 6.5 அங்குலம், 6.1 அங்குலம் ஆகிய அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய மாடல்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நானோ சிம் ஆகவும் மற்றையது இசிம் (eSIM) ஆகவும் வழங்கப்பட்டுள்ளது. இசிம் வழங்கப்பட்டுள்ளதால் பிரத்தியோக சிம் அட்டைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இம்மூன்று மாடல்களினதும் பொதுவான அம்சங்களாக நாட்ச் திரை, வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் 5.0, ஃபேஸ் ஐடி, ஐ.ஓ.எஸ் இயங்குதளம் 12 போன்றவற்றை குறிப்பிடலாம்.
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் ஐபோன் XR

ஐபோன் XS | ஐபோன் XS மேக்ஸ் | ஐபோன் XR| போன்றவற்றின் விபரக்குறிப்புகள் பின்வருமாறு:

கேமரா:

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட டூயல் பின்புற கேமராவை கொண்டுள்ளன. ஐபோன் XR இல் 12 மெகாபிக்சல் தனித்த கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்ற மாடல்களிலும் 7 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட முன்பக்க TrueDepth கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நினைவகம்:

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் போன்றவற்றில் 64 ஜிபி, 256 ஜிபி, மற்றும் 512 ஜிபி ஆகிய நினைவகங்களை கொண்ட பதிப்புக்களும் ஐபோன் XR இல் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி போன்ற நினைவகங்களை கொண்ட பதிப்புக்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அளவு:

  • ஐபோன் XS: உயரம் 143.6 மில்லிமீட்டர், அகலம் 70.9 மில்லிமீட்டர், தடிமன் 7.7 மில்லிமீட்டர்
  • ஐபோன் XS மேக்ஸ்: உயரம் 157.5 மில்லிமீட்டர், அகலம் 77.4 மில்லிமீட்டர், தடிமன் 7.7 மில்லிமீட்டர்
  • ஐபோன் XR: உயரம் 150.9 மில்லிமீட்டர், அகலம் 75.7 மில்லிமீட்டர், தடிமன் 8.5 மில்லிமீட்டர்

பேட்டரி:

ஐபோன் XS இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரியானது சென்ற வருடம் ஐபோன் X இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை விட 30 நிமிடம் நீடித்து உழைக்கக் கூடியதாகும்.
ஐபோன் XS மேக்ஸ் இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஐபோன் X இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை விட 1.5 மணித்தியாலம் நீடித்து இயங்கும்.
ஐபோன் XR இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஐபோன் 8 ப்ளஸ் இல் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை விட 1.5 மணித்தியாலம் நீடித்து இயங்கக்கூடியதாகும்.
இந்த மூன்று மாடல்களையும் 30 நிமிடம் மின்னேற்றுவதன் மூலம் 50% மின்னேற்றிக்கொள்ள முடியும்.

விலை:

  • ஐபோன் XS: $999 (64GB) | $1,149 (256GB) | $1,349 (512GB)
  • ஐபோன் XS MAX: $1,099 (64GB) | $1,249 (256GB) | $1,449 (512GB)
  • ஐபோன் XR: $749 (64GB) | $799 (128GB) | $899 (256GB)

வெளியாகும் திகதி:

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் ஆரம்பமாக இருக்கின்றன. இதன் விற்பனை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இடம்பெறும்.
ஐபோன் XR இற்கான முன்பதிவுகள் அக்டோபர் 19 ஆரம்பமாகி அக்டோபர் 26 முதல் விற்பனை இடம்பெறும்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips