Social Icons

Monday, September 17, 2018

நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்! ஒரு சுவாரஷ்யமான இணையத்தளம்

நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை எத்தனை நாட்கள் வாழ்ந்து உள்ளீர்கள்? என கேட்டால் கூற முடியுமா? கொஞ்சம் சிரமத்துடன் கணித்துக் கூற முடியும் அல்லவா?
ஆனால்… நீங்கள் பிறந்தது தொடக்கம் இன்றுவரை உங்கள் இதயம் எத்தனை தடவை துடித்துள்ளது? எத்தனை முறை சுவாசித்து உள்ளீர்கள்? சந்திரன் உலகை எத்தனை தடவைகள் சுற்றியுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு மனதால் கணித்து விடை கூறுவது சற்று சிரமாமான காரியமே. எனவே மேற்குறிப்பிட்டது போன்ற சில சுவாரஷ்யமான கேள்விகளுக்கு உடனடியாக விடையை தருகின்றது கீழுள்ள இணையத்தளம்.


தொடர்புடைய இடுகை: உங்கள் மொபைல் போனை ரீசெட் செய்வது எப்படி? கற்றுத்தரும் இணையத்தளம்
யூ ஆ கேட்டிங் ஓல்ட் எனும் இந்த இணையத்தளத்தின் மூலம் பின்வரும் கேள்விகளுக்கும் விடை காணலாம்.
You are getting old
  • நீங்கள் பிறக்கும் போது உலகில் வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை எத்தனை? இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை?
  • தன்னை தானாக சுற்றும் இந்த பூமியில் நீங்கள் எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணித்து உள்ளீர்கள்?
  • புவியில் இருந்து சூரியனை எத்தனை கிலோமீட்டர் வலம் வந்துள்ளீர்கள்?
  • நீங்கள் குழந்தையாக இருந்த போது உலகில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன? அதே போல் சிறுவராக, பருவ வயதை அடைந்த போது அல்லது உங்களது 20 – 30 ஆவது வயதில் உலகில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
  • நீங்கள் உலகில் பிறந்து 500, 1000, 2000, 5000, 10000, 20000, 40000 நாட்களை எட்டும் திகதி எப்போது?
எனவே மேற்குறிப்பிட்டது போன்ற நிகழ்வுகளை உங்கள் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்துக்கொள்ள விரும்பினால் நீங்களும் செல்லுங்கள் யூ ஆ கேட்டிங் ஓல்ட் எனும் இணையத்தளத்திற்கு.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips