Social Icons

Saturday, December 27, 2014

இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்

தொகுப்பு: MJM Razan
நம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல்.

இதில் நம் விருப்பத்திற்கு ஏற்ப நமது பெயரில் மெயில் ஐடியை உருவாக் கிக்கொள்ளலாம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், டொமைனையும் நீங்கள் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொள்ளலாம் என்பதே, Mail.com சேவையின் சிறப்பம்சம்!

Mail.com என்பது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்கு. மற்ற மின்னஞ்சல் கணக்குகளைப் போலவே எல்லாவிதமான வசதிகளையும் கொண்டுள்ள இதன் கூடுதல் பிளஸ்… வழக்கமான மின்னஞ்சல் முகவரி போன்று நாம் கொடுக்கும் மெயில் ஐடியுடன்.. yourname@gmail.com, yourname@yahoo.com, yourname@ymail.com என்று இல்லாமல் yourname@mail.com, yourname@email.com, yourname@post.com, yourname@photographer.net, yourname@engineer.com போன்ற 200க்கும் அதிகமான டொமைன்களையும் தேர்வுக்குத் தருகிறது.


இதன் மூலமாக நாம் விரும்பும் அல்லது நம் பணியை எடுத்துச் சொல்லும் வகையிலான டொமைனை தேர்வு செய்துகொள்ளலாம்.

www.mail.com என்ற வலைதள முகவரியில் உள்ள Get your free email account அல்லது free email என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப் படும் தகவல்களை கொடுத்து, இனி விரும்பும் டொமைனில் இமெயில் கணக்கை உருவாகிக்கொள்ளுங்கள்!

இதன் கூடுதல் சிறப்பு…

* அன்லிமிட்டட் மெயில் ஸ்டோரேஜ்
* எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
* மிக எளிதாக பயன்படுத்தும் வண்ணமாக எளிய அமைப்பு.
* வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips