Social Icons

Saturday, December 27, 2014

இனி உங்கள் திறப்பு தொலையாது

தொகுப்பு: MJM Razan
இந்த வருடம் டாப் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி. அந்த மோட்டோரோலா நிறுவனத்திடமிருந்து வந்திருக்கும் புதிய வரவு தான் “கீ லிங்க்”(Key link).

நம்மில் பலருக்கு பைக் கீயையும், மொபைல் போனையும் வைத்த இடத்தில் மீண்டும் எடுக்கும் பழக்கமில்லை. ஒரு தேடலுக்கு பிறகே வைத்த பைக் கீ-யும், மொபைல் போனும் கிடைக்கிறது. மொபைல் போன் கூட பரவாயில்லை, இன்னொரு மொபைலிருந்து மிஸ்டு கால் விட்டு கண்டுபிடித்து விடலாம். ஆனால், ஆபீஸ் செல்லும்போது பைக் கீ வைத்த இடத்தை கண்டுபிடிப்பதற்குள் படாத பாடு அடைந்து விடுவோம்.


அப்படிப்பட்ட தோழர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் கீ லிங்க்.

இந்த கீ லிங்கை ஆண்டிராய்டு மற்றும் ஐ போன் ஆகிய இரண்டிலும் இணைக்கலாம். மோட்டோரோலா கீ லிங்க் ஆப் மூலம் மொபைலில் இணைக்கலாம். இந்த மோட்டோ ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ டியூன்ஸ் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த கீ செயின் மூலம் 100 அடி சுற்றளவிலுள்ள நமது மொபைலை ரிங் விட்டு கண்டுபிடிக்கலாம். நமது கீ செயினை கண்டுபிடிக்க, இந்த போனில் நிறுவப்பட்டுள்ள ஆப் உதவியுடன் மேப்பில் காணலாம்.

அதுமட்டுமின்றி உங்களின் இந்த கீ லிங்க், கீ செயின் அருகில் இருந்தால் போனில் பாஸ்வேர்ட் போட தேவையில்லை.

மோட்டோ எக்ஸ் (2 வது ஜெனரேஷன்) டிராயிட் டர்போ மற்றும் நெக்சஸ் 6 மொபைலில் மட்டுமே இயங்கும். ஆண்டிராய்டு 5.0 லாலிபாப் அல்லது அதற்கு மேலுள்ள வெர்ஷனில் இயக்கலாம்.

அமெரிக்காவில் தற்போது இந்த மொபைல் விற்பனையாகி வருகிறது. இதன் விலை $24.99 அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய்). இது இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் இதன் இந்தியா விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இதேபோல் நோக்கியாவின் விண்டோஸ் மூலம் இயங்கும் ட்ரெசர் டேக்(treasure tag) இந்த வருட ஆரம்பத்தில் ₹2,100 ரூபாய்க்கு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read: http://www.tamilcnnlk.com/archives/334894.html

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips