Social Icons

Monday, October 1, 2018

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன!

ஃபேஸ்புக் தளத்தில் இருந்த ஒரு குறைபாடு காரணமாக 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த குறைபாடு கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாதுகாப்பு குறைபாடு பேஸ்புக் தளத்தில் வழங்கப்பட்டிருந்த வியூ ஆஸ் (View As) எனும் வசதியில் இருந்தே ஏற்பட்டுள்ளது.
வியூ ஆஸ் (View As) என்பது, உங்களது பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்பதை சோதித்துக் கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த ஒரு வசதியாகும்.
ஆனால் வியூ ஆஸ் எனும் இந்த வசதி, பேஸ்புக் கணக்குகளுடைய கடவுச்சொல் பற்றிய ரகசிய தகவல்களை கொண்டிருக்கும் பாதுகாப்பு டோக்கனை (Security token) கசியவிடுகிறது. எனவே தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
தொடர்புடைய இடுகை: GRATULA என டைப் செய்வதன் மூலம் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்  ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியுமா?
இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வழமைக்கு திருப்பி இருப்பதுடன் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நான்கு கோடி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி 4 கோடி பேஸ்புக் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

உங்கள் ஃபேஸ்புக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதா என அறிவது எப்படி?

ஹேக் செய்யப்பட கணக்குகள் அனைத்தும் தானாக லாக் அவுட் (Logout) செய்யப்பட்டுள்ளன. எனவே உங்கள் கணக்கும் லாக் அவுட் செய்யப்பட நிலையில் இருந்தால் உங்களது பேஸ்புக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் பேஸ்புக் கணக்கிற்கு உள்நுழையும்போது உங்களளிடம் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கோரப்படவில்லை எனின் நீங்கள் அந்த 9 கோடி கணக்குகளுக்கு உட்படாதவர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips