Social Icons

Monday, October 1, 2018

உங்களது ஆன்லைன் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்குமா? அறிவது எப்படி?

இணையம் என்பது இன்று அனைவராலும் சர்வ சாதரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணையம் இன்றி ஒரு நாளை களிப்பது கூட சிரமமாக மாறிவிட்டது. அப்படித்தானே?
எனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற ஏராளமான தளங்களில் நாம் எமக்கென்று கணக்குகளை உருவாக்கி அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம்.
அவ்வாறான தளங்களில் எமது இரகசிய தனிப்பட்ட தகவல்களை கூட பதிந்து வைத்திருப்போம் அல்லவா? ஆகவே அண்மையில் 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதுபோல் ஏனைய தளங்களும் அன்றாடம் இணைய வழி தாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றன. அவ்வாறான தாக்குதல்களை இனங்கண்டு அவற்றுள் உங்களது தகவல்களும் கசிந்திருக்குமா? என்பதை அறிய உதவுகின்றது நாம் கீழே பார்க்கும் இணையத்தளம்.

கடந்த காலங்களில் உலகளாவியரீதியில் இடம்பெற்ற மிக மோசமான இணையவழித் தாக்குதல்கள்

மானிட்டர் பயர்பொக்ஸ்:

எமது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் ஏராளமான தளங்களில் கணக்குகளை உருவாக்கி இருப்போம் அல்லவா? அவ்வாறு நாம் இணையதளங்களில் உருவாக்கி இருக்கும் எமது கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்குமா? எனும் கேள்விக்கு விடை தருகின்றது “மானிட்டர் பயர்பொக்ஸ்” எனும் இணையதளம்.
அவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தால் எவ்வாறான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கும் என்பதையும் இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களது மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், பயனர் பெயர்கள், பிறந்த திகதிகள், கடனட்டை விபரங்கள், இணைய மற்றும் வங்கி நடவடிக்கைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மானிட்டர் பயர்பொக்ஸ் இணையத்தளத்தை கணினி, ஸ்மார்ட்போன் உட்பட இணையம் பயன்படுத்த முடியுமான எந்த ஒரு சாதனத்தை கொண்டும் அணுகலாம்.
குறிப்பிட்ட இணையத்தளத்துக்கு விஜயம் செய்த பின்னர் எமது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் எமது இணைய கணக்குகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா? என்பதை சோதித்து அறிய முடியும்.
மேலும் உங்களது ஆன்லைன் கணக்குகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆலோசனைகளையும் இந்த தளம் வழங்குகின்றது.
எனவே நீங்களும் உங்களது ஆன்லைன் கணக்குகளின் பாதுகாப்புத் தன்மையை அறிந்து கொள்ள விரும்பினால் மானிட்டர் பயர்பொக்ஸ் எனும் இணையத்தளத்துக்கு செல்க. இதற்கு மாற்றீடாக Have I Been PWNEDஎனும் இணையதளத்தையும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips