Social Icons

Sunday, October 21, 2018

இணைய வேகத்தை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும் இன்டர்நெட் ஸ்பீட் மீட்டர்

இணையம் பயன்படுத்தப்படாத ஸ்மார்ட்போன்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து மொபைல் போன்களிலும் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நாம் எமது ஸ்மார்ட்போனுடன் இணையத்தை தொடர்பு படுத்தி வைத்திருக்கும் போது எம்மை அறியாமலேயே சில செயலிகள் இணையத்துடன் தொடர்பு படுத்தப் படலாம்.

இவ்வாறு எம்மை அறியாமலேயே செயலிகள் இணையத்துடன் தொடர்பு படுவதால், எம்மை அறியாமலேயே இணைய பாவனை அதிகரித்து நாம் இணையத்துக்காக செலவு செய்யும் பணத் தொகை அதிகரிக்க நேரிடும்.



எனவே எமது மொபைல் போனுடன் இணையம் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எம்மை அறியாமல் இணையும் பயன்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள உதவுகின்றது இன்டர்நெட் ஸ்பீட் மீட்டர்எனும் செயலி. இதனை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கீழே வழங்கியுள்ளோம்.


இன்டர்நெட் ஸ்பீட் மீட்டர் எனும் இந்த செயலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிய பின்னர் அது உங்கள் ஸ்டேட்டஸ் பாரில் வந்து அமர்ந்து கொள்ளும்.


பின்னர் நீங்கள் உங்கள் மொபைல் போன் மூலம் இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் எந்த அளவு இணையம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இந்தச் செயலி ஸ்டேட்டஸ் பார் மூலம் காண்பிக்கும்.


இந்த வசதி மூலம் உங்களது இணைய பாவனையை எந்நேரமும் கண்காணிக்கலாம். இதன் காரணமாக தேவையற்ற இணையப் பாவனையை தவிர்த்து உங்களது பணத்தையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும் அல்லவா?


மேலும் ஒவ்வொரு நாளும் எந்த அளவு இணையம் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்தப்பட்டுள்ள இணையப்பாவனையை தனியாகவும், வைபை மூலம் பயன்படுத்தப்பட்டுள்ள இணையப்பாவனையை தனியாகம் அறிந்து கொள்ள முடிகின்றமை இதன் விஷேட அம்சமாகும்.

எனவே நீங்களும் இந்த செயலியை பயன்படுத்தித் தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips