Social Icons

Sunday, October 21, 2018

கூகுள் அறிமுகப்படுத்தும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள்


கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி நியூயார்க்கில் இடம்பெற்ற கூகுளின் நிகழ்வில் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள், பிக்சல் ஸ்லேட் குரோம்புக், மற்றும் கூகுள் ஹோம் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஆகிய இரு புதிய ஸ்மார்ட்போன்களும் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஆகும்.
பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL

குவால்காம் ஸ்னேப்டிராகன் 845 ப்ராசசர், 4 ஜிபி ரேம், டூயல் செல்பி கேமரா, 12.2 மெகாபிக்சல் பிரதான கேமரா போன்றவற்றை இவைகள் உள்ளடக்கியுள்ளன.



பிக்சல் 3 ஸ்மார்ட்போன் 5.5 அங்குல திரையையும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 6.3 அங்குல திரையையும் கொண்டுள்ளது.


இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

இதன் விலை 71,000 இந்திய ரூபாய்கள் முதல் ஆரம்பமாகின்றது.


No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips