Social Icons

Sunday, October 21, 2018

சாம்சங் கேலக்ஸி ஏ9: நான்கு பின்புற கேமரா! 8ஜிபி ரேம்!

அண்மையில் மூன்று கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்திய சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ஞாபகம் இருக்கிறதா? இல்லை இல்லை, மூன்று கேமராக்கள் போதாது என நீங்கள் கருதினால், இதோ! நான்கு கேமராக்களுடன் “சாம்சங் கேலக்ஸி ஏ9”எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகின்றது சாம்சங் நிறுவனம். உலகில் முதலாவது குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



6.3 அங்குல ஃபுல் எச்டி 2,220×1,080 பிக்சல் திரையை இது கொடுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9: குவாட் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 4 கேமராக்களும் வெவ்வேறு வகையான புகைப்படங்களை எடுப்பதற்கு துணைபுரிகின்றன.



பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பிரதான கேமரா 24 மெகாபிக்சல் திறன் கொண்டதாகும். இதனுடன் 8 மெகாபிக்சல் திறன் கொண்ட அல்ட்ரா வைட் எனும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 120 பாகை கேணத்தில் புகைப்படங்களை எடுக்கக் கூடியதாகும். மேலும் இவற்றுடன் டெலிபோட்டோ (10MP,) மற்றும் டெப்த் (5MP) போன்ற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் செல்பி கேமராவும் 24 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்டதாகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ9 விபரக்குறிப்புகள்
இயங்குதளம் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
திரை 6.3 அங்குல ஃபுல் எச்டி + Super AMOLED
ப்ராசசர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 710
ரேம் 6ஜிபி மற்றும் 8ஜிபி
நினைவகம் 128ஜிபி + (மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 512ஜிபி அதிகரிக்கலாம்
பின்புற கேமரா குவாட் கேமரா:
24 மெகாபிக்சல்
8 மெகாபிக்சல் வைட் ஏங்கள்
5 மெகாபிக்சல் டெப்த்
10 மெகாபிக்சல் டெலிபோட்டோ
செல்பி கேமரா 24 மெகாபிக்சல், F2.0
பேட்டரி 3,800mAh
நிறை 183g
அளவு 162.5 x 77 x 7.8 மில்லிமீட்டர்


அத்துடன் இதில் 6ஜிபி, 8ஜிபி ஆகிய ரேம்களை கொண்ட இருவேறு பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் நினைவகம் 128ஜிபி ஆகும் தேவை எனின் மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி 512ஜிபி வரை அதிகரிக்கலாம்.

மேலும் இது குவால்காம் ஸ்னேப்டிராகன் 710 சிப்செட்-ஐ கொண்டுள்ளதுடன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.




சாம்சங் கேலக்ஸி ஏ9 (1)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (2)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (3)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (4)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (5)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (6)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (7)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (8)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (9)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (10)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (11)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (12)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (13)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (14)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (15)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (16)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (17)




சாம்சங் கேலக்ஸி ஏ9 (18)



இதன் விலை சுமார் 700 தொடக்கம் 725 அமெரிக்க டாலர்களாக அமைந்திருக்கும். இதனை எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips