Social Icons

Monday, October 1, 2018

ஒரு இணையதளத்தை ஆண்ட்ராய்டு போனில் தடை செய்வது எப்படி?

இன்று இணையதளங்களை உலா வருவதற்காக கணினியை விட ஸ்மார்ட் போன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை மிக இலகுவாக பயன்படுத்த முடிவதால் எம்மைப் போன்று எமது சிறார்களும் இணையதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களது கற்றல் தேவைகளுக்காக ஏராளமான இணையதளங்கள் இருக்கும் அதேநேரம், அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக் கூடிய இணையதளங்களும் கூடவே இருக்கின்றன.

எனவே ஸ்மார்ட்போன் மூலம் தேவையற்ற இணையதளங்களை அணுகுவதை தடுத்துக் கொள்ள உதவுகின்றது நாம் கீழே வழங்கியிருக்கும் செயலி.
இது பிளாக் சைட் என அழைக்கப்படுகின்றது. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூட் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தொடர்புடைய இடுகை: ஆண்ட்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய அல்ட்ரா லாக் செயலி
Block Sites On Android
தேவையற்ற இணையதளங்கள் எனக் கருதும் அத்தனை இணைய தளங்களின் முகவரிகளையும் இந்த செயலியில் உள்ளிடுவதன் மூலம் குறிப்பிட்ட தளங்களை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் அணுகுவதை தடை செய்து கொள்ளலாம்.
Block Website Android
தடையை மீறி குறிப்பிட்ட தளங்களுக்கு செல்லும்போது இவ்வாறான செய்திகள் தோன்றும் 😀
மேலும் இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ள Block Adult Websites என்பதை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் தேவையற்ற ஆபாச இணையதளங்களை உங்கள் மொபைல் போன் மூலம் எவராலும் அணுக முடியாதவாறு தடை செய்து கொள்ளலாம்.
இவைகள் தவிர உங்கள் மொபைல் போனில் நிறுவப்பட்டிருக்கும் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப்  அல்லது இது போன்ற வேறு செயலிகளையும் ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு தடை செய்து கொள்ள முடியும்.
நீங்களும் இவ்வாறான வசதிகளை பெற்றுக்கொள்ள விரும்பினால் பிளாக் சைட் செயலியை பயன்படுத்திப் பாருங்கள்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips