Social Icons

Monday, October 1, 2018

சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் மற்றும் ஜே 4 பிளஸ் | இன்ஃபினிடி திரை | கிளாஸ் பேக்

ஸ்மார்ட் போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜே 4 பிளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே 6 மற்றும் ஜே 4  ஸ்மார்ட் போன்களை விட சற்று மேம்படுத்தப்பட்ட அம்சங்களை இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் மற்றும் ஜே 4 பிளஸ் போன்களின் பொதுவான அம்சங்கள்:

இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 வகையான பிராசசர் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் வழங்கப்பட்டுள்ள 18.5:9 ஆஸ்பெக்ட் ரேசியோ உடன் கூடிய ட்ரூ எச்டி இன்ஃபினிடி திரையானது வீடியோ  கோப்புக்களை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை வழங்கும்.
தொடர்புடைய இடுகை: மூன்று ரியர் கேமராக்களுடன் அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் கேலக்ஸி ஏ7
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பொதுவான அம்சங்களாக ஐபிஎஸ் எல்சிடி 6 அங்குல திரை, டூயல் சிம் வசதி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், பளபளப்பான மேற்புறம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
J6 பிளஸ் ஃபிங்கர்ப்ரின்ட்
இவற்றில் ஃபிங்கர்ப்ரின்ட் வசதி ஸ்மார்ட்போனின் ஓரப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

ஜே 6 பிளஸ் மற்றும் ஜே 4 பிளஸ் போன்களுக்கு இடையிலான வேறுபாடுகள்:

ரியர் கேமரா:

இவற்றின் பிரதான வேறுபாடுகளாக இவற்றில் வழங்கப்பட்டுள்ள கேமராவை குறிப்பிடலாம். சாம்சங் கேலக்ஸி J6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமராக்களும், சாம்சங் கேலக்ஸி J4 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் சிங்கள் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

செல்பி கேமரா:

ஜே 6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் ஜே 4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

நினைவகம் + ரேம்:

மேலும் சாம்சங் கேலக்ஸி ஜே 6 பிளஸ் ஸ்மார்ட்போன், 64 ஜிபி உள்ளக நினைவகத்துடன் 4 ஜிபி ரேம் கொண்ட ஒரு பதிப்பையும் 32 ஜிபி நினைவகத்துடன் 3 ஜிபி ரேம் கொண்ட மற்றுமொரு கொண்டுள்ளது.
ஜே 4 பிளஸ் ஸ்மார்ட்போன் 32 ஜிபி நினைவகத்துடன் 3ஜிபி ரேம் கொண்ட ஒரு பதிப்பையும் 16 ஜிபி நினைவகத்துடன் 2ஜிபி ரேம் கொண்ட ஒரு பதிப்பையும் கொண்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடந்த 2018 செப்டம்பர் 25ம் திகதி தொடக்கம் இந்தியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ஏறத்தாழ 15,990 இந்திய ரூபாய்கள் ஆகவும், கேலக்ஸி ஜே 4 ப்ளஸ் போனின் விலை ஏறத்தாழ 10, 900 இந்திய ரூபாய்கள் ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளன.
புகைப்பட உதவி: Samsung

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips