இன்டர்நெட் உலகில் கூகுள் கால்பதித்த பின்னர் பல்வேறு துறைகளில்
அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறது. ஜி-மெயிலில் களமிறங்கிய போது யாருமே
மற்ற நிறுவனங்கள் யாருமே வழங்க முடியாத அளவுக்கு முதலில் ஒரு ஜிபி வரை
ஈ-மெயிலில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியை கொண்டு வந்தது. பின்னர்
படிப்படியாக உயர்ந்து தற்பொது சுமார் 25 ஜிபி அளவுள்ள தகவல்களைக்கூட கூகுள்
டிரைவ் மூலமாக மற்றவர்களுக்கு இணையதளத்தில் அனுப்பலாம். இந்த வசதியை
கூகுள் முதன்முதலில் அறிமுகப்படுத்திய போது, பிற ஈ-மெயில் சேவை நிறுவனங்கள்
இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றனர்.
ஆனால் இதில் அசத்திய
கூகுள் இதன் பின்னர் இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாக ஒரு இடத்தை
பிடித்துவிட்டது. இணையதளம் பயன்படுத்தும் 90 சதவீதம் பேர் இன்று கூகுளில்
கணக்கு வைத்துள்ளனர். மேலும் அனைத்து சமூக வளைதளங்களுக்கும் கூகுள்
கணக்கையே பயன்படுத்தும் அளவுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்த
நிறுவனம், கூகுள் மேப், கூகுள் எர்த் மற்றும் நேவிகேட்டர் ஆகியவற்றை
அறிமுகப்படுத்தியது. மேலும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பிலும்
ஈடுபட்டு புரட்சி செய்துவந்தது.
இந்த வரிசையில் தற்போது அதிவேக
இன்டர்நெட் வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக தீவிர முயற்சியில்
இறங்கியுள்ளது. இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் ஒரு வினாடிக்கு 10ஜிபி
வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதை
வீட்டு கம்ப்யூட்டர்களில் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் கூகுள்
ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
என்பதில் கூகுள் குறியாக உள்ளது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் பொதுமக்கள்
பயன்படுத்தும் இன்டர்நெட் உலகின் ஜாம்பவானாக கூகுள் திகழும் என்பதில்
சந்தேகமில்லை.
No comments:
Post a Comment