Social Icons

Tuesday, July 8, 2014

இந்திய கார்களுக்காக 3 புதிய நேவிகேஷன் கருவிகள் கார்மின் நிறுவனம் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
இந்தியாவில் உள்ள கார்களில் நேவிகேஷன் சிஸ்டத்துடன் இயங்கும் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பாக சொகுசு கார்கள் மற்றும் வெளிநாட்டு  கார்களில் மட்டுமே தற்போது நேவிகேஷன் எனப்படும் வழித்தடம் காட்டும் கருவிகள் உள்ளது. இவற்றையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே நேரடியாக  கார்களில் பொருத்தி விற்பனை செய்துவந்தது. ஆனால் தற்போது இதன் நிலையே வேறு அனைத்து கார்களிலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் ஜிபிஎஸ்  வசதியுடன் கூடிய நேவிகேஷன் கருவிகள் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன.


இந்த வரிசையில் கார்மின் நிறுவனம் இந்தியாவில் உள்ள கார்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் 3 புதிய சாட்டிலைட் நேவிகேஷன் கருவிகளை சந்தையில்  விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இது 10 இந்திய மொழிகளில் தகவல்களை அளிக்கும் விதமாகவும், வாய்ஸ் மீட்டர் மற்றும் துல்லியமான வழித்தடங்கள்  மற்றும் தேவைப்படும் போது அப்டேட் செய்துகொள்ளும் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கார்மின் நிறுவனம் இந்த புதிய நேவிகேஷன் கருவிகளுக்கு 'நூவி  55எல்எம்”, “நூவி 65 எல்எம்” மற்றும் “நூவி 2567 எல்எம்” என பெயரிட்டுள்ளது.

இதன் விலை முறையே ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால், நூவி 55 எல்எம் நேவிகேஷன்  கருவியில் 12.7 சென்டிமீட்டர் தொடுதிரை உள்ளது. இதன்மூலம் எதிரில் வரும் சாலைகள் மற்றும் செல்லவேண்டிய இடத்திற்கான குறுக்கு வழிகள், பெட்ரோல்  பங்க், ஓட்டல், ஏடிஎம், ரெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்டவற்றை தெளிவாக காணலாம். மேலும் நேவிகேஷன் கருவியில் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு  செய்துவிட்டால், திருப்பம் மற்றும் சந்திப்புகள் வரும்போது வாய்மொழி தகவல் மூலம் எந்த பக்கம் செல்ல வேண்டும் என எச்சரிக்கும்.

நூவி 65 எல்எம் கருவியின் திரை சற்று பெரியது இதன் அளவு 15.24 சென்டிமீட்டர். இதில் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், வழித்தட எச்சரிக்கை ஓசை,  நெடுஞ்சாலைகளில் உள்ள சந்திப்புகள் மற்றும் குறுக்குவழிகள் போன்றவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வாய்மொழி தகவல்களாக பெறமுடியும்.  இதே போல நூவி 2567 எல்எம் கருவி முகவரியை துல்லியமாக காட்டும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips