Social Icons

Monday, May 26, 2014

அப்பாடா சண்ட முடிஞ்சி போச்சு

தொகுப்பு: MJM Razan
உலகின் மிக பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், செல்போன் விற்பனையில் சாதனை படைத்து வந்தநிலையில், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வெளியான பின்னர் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக சாம்சங் நிறுவனமும் விற்பனையில் கலக்கியது. நாளுக்கு நாள் விதவிதமான தொழில்நுட்பங்களுடன் கூடிய செல்போன்களை அறிமுகப்படுத்தியது. மக்களும் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளையே அதிகம் வாங்க தொடங்கினர். அப்படி என்னதான் சாம்சங் நிறுவனம் செய்துள்ளது என்று ஆராய்ந்த ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது.


ஏனென்றால் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் என்ற பெயரில் அந்நிறுவனத்தில் பயன்படுத்தப்படுவது போன்றே அனைத்து தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து உடனடியாக ஆப்பிள் நிறுவனம், சாம்சங் மீது வழக்கு தொடர்ந்தது. அன்று முதல் இவ்விரண்டு நிறுவனங்களும் பரம எதிரிகளை போல மாறியது. ஒரு கட்டத்தில் சாம்சங் தயாரிப்பில் ஆப்பிள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய நீதிமன்றம் ஒரு பெரிய தொகையை ஆப்பிள் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சாம்சங் இந்த தொகையை ஒரு லாரி முழுவதும் சில்லரையாக நிரப்பி ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி வெறுப்பேற்றியது. இதையடுத்து இரண்டு நிறுவனங்களும் ஒன்றை ஒன்று குறைகூறி வழக்குகளை தொடர்ந்து வந்தது. இது சகஜமானது என்றாலும் தற்போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. செல்போன் விற்பனையில் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனமும், அதன் எதிரியாக இருந்து வந்த சாம்சங் நிறுவனமும், ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் படி இரண்டு நிறுவனங்களும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதன் மூலம் சாம்சங் மீதான வழக்குகளை ஆப்பிளும், ஆப்பிள் நிறுவனம் மீதான வழக்குகளை சாம்சங்கும் திரும்ப பெற்றுக்கொள்ள உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எப்படியோ, ஒருவழியா எல்லா சண்டையும் முடிஞ்சி போச்சி. இனிமே சண்ட வரணும்ன்னா புதுசா ஏதாவது யோசிக்கனும் என இரண்டு நிறுவனங்களுமே பெருமூச்சு விட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips