ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது “ஆண்ட்ராய்டு பை” எனும் இயங்குதளமாகும் (2018.)
ஆண்ட்ராய்டு ஓரியோ எனப்படும் அதன் முன்னைய பதிப்பை விட பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இந்த புதிய பதிப்பில் வால்யூம்-ஐ கூட்டிக் குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வசதியானது பார்பதற்கு அழகாகவும் பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை எந்த ஒரு ஆண்ட்ராய்டு போனிலும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது “வால்யூம் கண்ட்ரோல் ஆண்ட்ராய்டு பி” எனும் செயலி.
இந்த செயலியை நிறுவுவதன் மூலம் உங்கள் மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ள வால்யூம்-ஐ கூட்டிக் குறைப்பதற்கான இடைமுகத்திற்கு பதிலாக “ஆண்ட்ராய்டு பை” இயங்குதளத்தின் வால்யூம் கண்ட்ரோல் இடைமுகத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய இடுகை: கேலக்சி எட்ஜ் போனில் உள்ள எட்ஜ் பேனலை எந்த ஒரு ஆண்ட்ராய்டு போனிலும் பயன்படுத்துவது எப்படி? |
மேலும் இந்த வால்யூம் கண்ட்ரோல் இடைமுகத்தின் வர்ணத்தையும் உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ள இதில் வசதி தரப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் அல்லது அதற்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிப்புக்களிலும் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ப்ரோ பதிப்பு என இருவேறு பதிப்புகள் உள்ளன. கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இலவச பதிப்பை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளலாம். தெரிவு செய்யப்படும் 15 வாசகர்களுக்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக வழங்க உள்ளோம். கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பில் விளம்பரங்கள் தோன்றாது.
பரிந்துரைக்கப்படும் இடுகை: ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் உள்ள நோட்டிபிகேஷன் பேனல் உங்கள் மொபைலுக்கு வேண்டுமா? |
நீங்களும் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக பெற விரும்பினால் இங்கே சுட்டும்போதுபெறப்படும் எமது பேஸ்புக் பதிவை லைக், ஷேர் (Share) செய்துவிட்டு Inbox Me என காமெண்ட் செய்க.
முதலில் லைக், காமெண்ட், ஷேர் செய்யும் 15 வாசகர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment