நீங்களும் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
கூகுள் குரோம் இணைய உலாவி அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது 10 வருடங்கள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு கூகுள் குரோம் இணைய உலாவியின் 69 ஆம் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பை நிறுவிக்கொள்வதன் மூலம் குரோம் உலாவியின் புதிய தோற்றத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
கணினிகளுக்கான குரோம் உலாவியில் “New Tab” பகுதிக்கு உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை பின்புலமாக இட்டுக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உங்களது அல்லது உங்கள் விருப்பத்திற்குரிய நபரின் புகைப்படத்தை குரோம் இணைய உலாவியின் பின்புல படமாக இட்டுக்கொள்ளலாம்.
குரோம் அப்டேட்: கணினி
கணினிகளுக்கான குரோம் உலாவியில் chrome://settings/help என அட்ரஸ் பாரில் தட்டச்சு செய்வதன் மூலம் உங்களது உலாவியை புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
குரோம் அப்டேட்: ஆண்ட்ராய்டு
நீங்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு போன் எனின் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் உங்கள் குரோம் உலாவியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இருந்த போதிலும் இதன் புதிய பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்படவில்லை (5 செப்டம்பர் 2018.) ஆகவே இதன் புதிய பதிப்பை நாம் கீழே வழங்கியுள்ள APK பைலை டவுன்லோட் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு போனில் புதிய பதிப்பை நிறுவிய பின்னரும் புதிய தோற்றம் கிடைக்க வில்லை எனின்:
புதிய பதிப்பை நிறுவிய பின்னரும் உங்களுக்கு குரோம் உலாவியின் புதிய தோற்றம் கிடைக்கவில்லை எனின், உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள அப்ளிகேஷன் மேனேஜர் பகுதிக்கு செல்க. பின்னர் அதில் குரோம் உலாவியை தேடிப்பெற்று அதன் Cache மெமரியை நீக்கி விடுக. பின்னர் குரோம் உலாவியை மீண்டும் திறவுங்கள். இனி உங்களாலும் அதன் புதிய தோற்றத்தை பெற்றுக்கொள்ளலாம்.
நாட்ச் ஸ்க்ரீன் ஆதரவு:
ஐபோன் எக்ஸ் (iPhone X) மற்றும் அது போன்று நாட்ச் திரையை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய வகையில் குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment