Social Icons

Thursday, September 20, 2018

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா? கண்களை பாதுகாக்க இதோ ஒரு செயலி!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பாவனை மேலோங்கி காணப்படுகின்றது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தவறாமல் பயன்படுத்திவரும் ஒரு அன்புச் சாதனம் இன்றைய நவீன கையடக்க தொலைபேசி என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட ஒரு சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன.

தற்போது வடிவமைக்கப்படும் நவீன கையடக்க தொலைபேசிகள் (Smartphone) மற்றும் டேப்லெட் (Tablet)  சாதனங்கள் போன்றன அதி விசாலமான திரைகளை கொண்டதாகவும் அதிக அளவிலான பிரகாசத்தை வெளிப்படுத்தக் கூடியவைகளாகவும் வடிவமைக்கப்படுகின்றன. இது குறிப்பிட்ட சாதனத்திற்கு அழகிய தோற்றத்தை கொடுத்தாலும் கூட எமது உடல்நலத்துக்கு அது ஊறு விளைவிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், வெளிச்சம் குறைந்த ஒரு இடத்தில் அல்லது இரவு நேரங்களில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதன் திரையில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்களானது எமது கண்களை பாதிக்கின்றது. இதனால் தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி உட்பட இன்னும் பல ஏராளமான உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Twilight செயலி

மேற்குறிப்பிட்டது போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது Twilight எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. இது உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் இருந்து வெளிவரும் நீல நிற கதிர்களை கட்டுப்படுத்தி உங்கள் கண்களினதும் உடலினதும் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
Twilight App
இதனை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் மிக இலகுவாக நிறுவி பயன்படுத்த முடிவதுடன் இது இலவசமான ஒரு செயலி என்பது மேலும் இனிப்பான விடயம் அல்லவா?

Twilight செயலியை பயன்படுத்துவது எப்படி?

  1. Twilight செயலியை  கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தில் நிறுவிக் கொள்ளலாம்.
  2. பின்னர் நிறுவப்பட்ட செயலியை திறந்து அதன் பிரதான சாளரத்துக்கு செல்க.
  3. இனி குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற Play பட்டனை அலுத்துக.
Twilight Android App
அவ்வளவுதான்! இனி Twilight செயலி துவங்க ஆரம்பித்துவிடும். உங்கள் கண்கள் பாதுகாக்கப்படும்.

Twilight செயலியின் மேலதிக வசதிகள்.

  • Twilight செயலியின் உதவியுடன் திரையில் இருந்து வெளிப்படும் பிரகாசம் மற்றும் நிறம் போன்றவற்றினை உங்கள் வசதிக்கு ஏற்றாட் போல் மாற்றியமைக்க முடியும்.
  • நாள் முழுதும் அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மாத்திரம் அல்லது சூரிய உதயம்/அஸ்தமனம் போன்றவற்றிற்கு ஏற்ப Twilight செயலியை இயங்கச் செய்ய முடியும்.
  • சந்தர்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றாட் போல், திரையில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் அளவுகளை உள்ளடக்கியதாக தனித்தனியான ப்ரொபைல் உருவாக்கி பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

Twilight செயலியின் பிரதிகூலம்.

  • நீங்கள் 2 இற்கு மேற்பட்ட ப்ரொபைல்களை உருவாக்கி பயன்படுத்த வேண்டும் எனின் Twilight செயலியின் PRO பதிப்பை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். (ஒரு சாதாரண பயனருக்கு இலவச பதிப்பே போதுமானது)

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips