Social Icons

Tuesday, September 25, 2018

அசுர வேகத்தில் பைல்களை அனுப்ப உதவும் இணையதளம்: இணைய இணைப்பு அவசியமில்லை! 😮

ஒரு மொபைல் போனில் உள்ள பைல்களை இன்னுமொரு மொபைல் போனுக்கு அனுப்ப பல வழிகள் உள்ளன.


அவற்றுள் இன்று இணையம், ப்ளூடூத் மற்றும் wi-fi direct போன்ற முறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


ப்ளூடூத் தொழில்நுட்பத்தை விட wifi direct தொழில்நுட்பம் மிக வேகமாக கோப்புக்களை பரிமாறிக்கொள்ள உதவுவதால் ஷேர் இட், Xender, சூப்பர் பீம் போன்ற அதிகமான செயலிகள் wi-fi direct தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன.


இருப்பினும் உங்களது மொபைல் போனில் எவ்வித செயலிகளையும் நிறுவாமல் பைல்களை மிக வேகமாக பரிமாறிக் கொள்ள உதவுகின்றது நாம் கீழே வழங்கியுள்ள Snapdrop எனும் இணையதளம்.

இந்த இணையத்தளமும் பைல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு wi-fi direct தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றது. இதனால் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் ஒரு மொபைல் போனிலிருந்து இன்னுமொரு மொபைல் போனுக்கு மிகக்குறுகிய நேரத்தில் அனுப்ப முடிகின்றது.
மொபைல் டேட்டா? பேலன்ஸ்? காசு?

குறிப்பிட்ட இணைய தளத்துக்கு விஜயம் செய்வதற்கு மாத்திரமே உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். (பின்னர் இணைய இணைப்பை துண்டித்து விடவும் முடியும்)

உபாயம் (TIP): நீங்கள் Snapdrop இணையதளத்தை ஆஃப்லைனில் பயன்படுத்தக்கூடிய வகையில் உங்கள் இணைய உலாவியில் சேமித்துக் கொண்டால் இணைய இணைப்பை பயன்படுத்த வேண்டிய தேவையே உங்களுக்கு இருக்காது.

பின்னர் இணையத்தின் உதவி இன்றியே எவ்வளவு பெரிய கோப்புகளையும் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் அல்லது கணினிகளுக்கு மத்தியில் அனுப்பவும் பெறவும் முடியும்.

மேலும் இந்த முறையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை இணைத்துப் பயன்படுத்த முடிகின்றமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஸ்நேப்டிராப் இணையதளத்தை பயன்படுத்தி கோப்புக்களை பரிமாறுவது எப்படி? 

ஒரு மொபைல் போனில் வைஃபை ஹாட்ஸ்பாட்-ஐ ஆன் செய்து அதனுடன் மற்றைய அல்லது ஏனைய சாதனங்களை வைஃபை மூலம் தொடர்பு படுத்துக. (வைஃபை ஹாட்ஸ்பாட் மூலம் சாதனங்களை இணைக்கத் தெரியாதா? அப்படியாயின் அறிந்துகொள்ள இங்கே சுட்டுக)


பின்னர் நீங்கள் பைல்களைப் பரிமாறிக் கொள்ள விரும்பும் சாதனங்களில் ஸ்நேப்டிராப் இணையதளத்துக்குச் செல்க.
இனி நீங்கள் வைஃபை மூலம் தொடர்புபடுத்தி இருக்கும் ஒவ்வொரு சாதனங்களும் குறிப்பிட்ட இணையதளத்தில் காண்பிக்கப்படும். 


பின் பைல்களை அனுப்ப வேண்டிய சாதனத்தை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான பைல்களை அவற்றுக்கு அனுப்பலாம்.
அனுப்பப்பட்ட பைல்களை பெற்றுக் கொள்ளும் ஸ்மார்ட்போனில் அல்லது கணினியில் அவற்றை டவுன்லோட் செய்வதற்கான சிறியதொரு விண்டோ தோன்றும். அதில் டவுன்லோட் என்பதை சுட்டுவதன் மூலம் மற்றைய சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட பைல்களை பெற்றுக் கொள்ள முடியும். 


அவ்வளவுதான்!


எனவே மேற்குறிப்பிட்ட வழியில் உங்கள் மொபைல் போனில் உள்ள ஆடியோ, வீடியோ, PDF ஆவணங்கள், மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆவணங்கள் உட்பட எந்த ஒரு கோப்பையும் மிக இலகுவாக உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் மிக இலகுவாக பரிமாறிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips