துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உலகின் மிக பெரிய ஆடம்பர
ஹோட்டலில் ஒன்றான புர்ஜ் அல் அராப் அமைந்துள்ளது. இது 7 ஸ்டார் ஹோட்டல் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர ஹோட்டல் (luxury hotel). 322 மீட்டர்
(1056 அடி) உயரமுள்ள கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில்
கடல் பகுதியில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச்
செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இந்த ஹோட்டலை நிலப்பகுதியுடன்
இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில்
அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள
ஹெலிபேட்டில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு உலகின் முன்னணி வீரர்கள்
இங்கு விளையாடினர் .இதன மூலம் உலகின் உயரமான இடத்தில் அமைந்த டென்னிஸ்
விளையாட்டு மைதானம் என்ற சாதனையையும் இந்த ஹோட்டல் பெற்றது. இங்கு ஒரு இரவு
தங்குவதற்கு குறைந்த பட்ச வாடகை ரூ 1 லட்சத்திற்கு மேலாகும்.
இக்கட்டிடத்தின்
கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப்
பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புடன்
காணப்படும். இந்நிலையில் வரும் டிசம்பர் 1ல் 15வது ஆண்டுகளை நிறைவு செய்வதை
கொண்டாடும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மிகபெரிய அளவில்
வாணவேடிக்கை ,3டி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை
உற்சாக படுத்துவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.2015லும்
இக்கொண்டாட்டங்கள் தொடரும் என ஜீமைரா நிறுவனத்தின் தலைவரும்,தலைமை செயல்
அதிகாரியுமான ஜெரால்ட் லாலஸ் கூறினார்.
Saturday, November 1, 2014
துபாயில் 15-வது ஆண்டை கடக்கும் கடலில் அமைந்துள்ள மிகபெரிய ஸ்டார் ஹோட்டல்!
தொகுப்பு: MJM Razan
Labels:
technology
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment