Social Icons

Thursday, August 13, 2015

தக்காளி பட்டாணி சாதம்

தொகுப்பு: MJM Razan
இதுவரை தக்காளி சாதம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த தக்காளி சாதத்துடன் பட்டாணி சேர்த்து சமைத்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் முயற்சித்துப் பாருங்களேன். இங்கு தக்காளி பட்டாணி சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தக்காளி பட்டாணி சாதமானது காலையில் மட்டுமின்றி, மதிய வேளையிலும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது தக்காளி பட்டாணி சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:[/b]

அரிசி – 2 கப்
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி – 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, பட்டாணயை சேர்த்து 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பிறகு தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு தூவி நன்கு 5-6 நிமிடம் வதக்கி, பின் அரிசியை கழுவிப் போட்டு, அரிசி மசாலாவுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், தக்காளி பட்டாணி சாதம் ரெடி!!!










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips