Social Icons

Saturday, November 1, 2014

காற்றிலிருந்து குடிநீர் தரும் கருவி : பிரான்ஸ் நிறுவனம் கண்டுப்பிடிப்பு


தொகுப்பு: MJM Razan
துபாய்: ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குடிநீருக்கு திண்டாடி வரும் நிலையில் மாற்று ஏற்பாடாக‌ காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளியில் செயல்படும் புதிய இயந்திரம் ஒன்றை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த இயந்திரம் மூலம் மின்சாரமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதிலிலுள்ள இயந்திரத்தின் மூல

பிரான்ஸ் நிறுவனமும் எமிரேட்ஸ் சுற்று சூழல் அமைப்பும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்துவதற்கென் பிரத்யோக இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் எமிரேட்ஸ் சுற்று சூழல் அமைப்பின் சேர்மன் மேஜர் அல் சக்ர் சல் சுவைதி தெரிவித்துள்ளார்.
ம் காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது .பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீராக பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர்  இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரம் நாளொன்றுக்கு 1000ம் லிட்டருக்கு மேல் உற்பத்தி செய்யும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips