தொகுப்பு: MJM Razan
ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்
ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து
மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.
இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு
ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220
ஆண்டுகளில் செலவிடமுடியும். வாரென் பப்பெட் இதே முறையில் 169 ஆண்டுகளில்
அவரது செல்வத்தை செலவிட முடியும்.
ஆக்ஸ்பாம் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதார மந்தநிலையின் போது
உலக பில்லியனர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு 794 ஆக இருந்த உலக பில்லியனர்களின்
எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 1,645 ஆக மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலக செல்வந்தர்களாக திகழும் பில் கேட்ஸ், வாரென் பப்பெட் ஆகியோர் சமூக
நல மற்றும் அறப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பில்கேட்ஸ் நடத்தி வரும்
பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளைக்கு 2014 ஆம் ஆண்டில் மட்டும் வாரென்
பப்பெட் 3 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment