Social Icons

Monday, September 17, 2018

பழைய போட்டோவை டிஜிட்டல் போட்டோவாக மாற்ற உதவும் செயலி

திருமண வைபவங்கள், பிறந்தநாள் விழாக்கள், சுற்றுலா பயணங்கள் போன்ற சந்தோசமான தருணங்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் ஏற்படுவதுண்டு.
அவ்வாறான சந்தர்பங்களில் நாம் எமது மொபைல் போன் மூலமோ அல்லது கேமரா மூலமோ பிடிக்கக்கூடிய புகைப்படங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் சாதனங்களில் சேமித்து வைக்கின்றோம் அல்லவா?
ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அவ்வாறு சேமிக்கும் வசதி இருக்கவில்லை. எனவே அவைகள் பௌதீக வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன.
எனவே அவ்வாறு பௌதீக வடிவில் இருக்கும் புகைப்படங்களை டிஜிட்டல் புகைப்படங்களாக மாற்றிக்கொள்ள உதவுகிறது கூகுள் தரும் அப்ளிகஷன். (இதன் பதிவிறக்க இணைப்பும் இங்கே வழங்கப்பட்டுள்ளது.)
தொடர்புடைய இடுகை: உங்கள் மொபைல் போனை ஒரு ஸ்கேனராக மாற்றுவது எப்படி?
இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு. நீங்கள் டிஜிட்டல் போட்டோவாக மற்ற விரும்பும் புகைப்படத்தை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்து கேப்சர் (Capture) செய்வதன் மூலம் மிக இலகுவாக உங்களது புகைப்படங்களை டிஜிட்டல் புகைப்படங்களாக மாற்றிக்கொள்ளலாம். போட்டோ ஸ்கேன் என அழைக்கப்படும் இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இருள் சூழ்ந்த ஒரு இடத்தில் இருந்து நீங்கள் கேப்சர் (Capture) செய்வதாயின் ஃபிளேஷ் லைட்டை செயற்படுத்திக் கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

PhotoScan
போட்டோ ஸ்கேன் செயலி மூலம் ஸ்கேன் செய்யும்போது

மேலும் நீங்கள் ஸ்கேன் செய்யும் புகைப்படங்கள் லேமினேட் செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து தெரிக்ககூடிய வெளிச்சம் வெளிவர வாய்ப்புள்ளது. இவ்வாறு வெளிப்படக்கூடிய ஒளியை தவிர்த்து தெளிவான டிஜிட்டல் புகைப்படங்களை எடுப்பதற்காக இதில் Glare Free எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Photo Scan Result Image
போட்டோ ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்த பின்னர்

எனவே இந்த செயலியை பயன்படுத்தி உங்களது பழைய புகைப்படங்களை டிஜிட்டல் புகைப்படங்களாக மாற்றி அவற்றை இணையத்தில் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் அவற்றை பாதுகாப்பாக உங்கள் ஆயுள் முழுவதும் பார்த்து மகிழக்கூடியதாக இருக்கும்.
இதனை ஆண்ட்ராய்டு ஐபோன் ஆகிய இரண்டு சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips