ஜிபி வாட்ஸ்அப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர் எனின் ஜிபி வாட்ஸ்அப் பற்றி நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் செயலியை விட இது பல மடங்கு வசதிகளை தருகின்றது.
நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலிக்கு பதிலாகவும் இதனை பயன்படுத்தலாம், அல்லது மற்றுமொரு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்துவதற்காகவும் இந்த செயலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளலாம்.
ஜிபி வாட்ஸ்அப் 6.50 எனும் புதிய பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலியின் 2.18.203 பதிப்பை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்குவதற்கான இணைப்பை நாம் கீழே வழங்கியுள்ளோம்.
ஜிபி வாட்ஸ்அப் 6.50 செயலியின் வசதிகள்:
- ஒரே மொபைல் போனில் ஒன்றுக்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தலாம்.
- வாட்ஸ்அப் செயலிக்கு அழகிய வர்ணங்களையும் தோற்றங்களையும் (தீம்: Theme) வழங்கலாம்.
- ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்யலாம்.
- வாட்ஸ்அப் வீடியோக்களை உங்களுக்கு விருப்பமான மீடியா ப்ளேயர் செயலியில் பார்க்கலாம்.
- குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது சிலருக்கு மாத்திரம் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்கலாம்.
- வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு செய்தி படிக்கப்பட்டால் அது படிக்கப்பட்டது என அனுப்பியவரால் அறிய முடியும். இதற்கு டிக் (Tick) அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான அடையாளங்கள் அனுப்பியவருக்கு சென்றடையாமல் தவிர்க்க முடியும்.
- உங்களுக்கு வரக்கூடிய செய்திகளுக்கு தானியக்க முறையில் மறுமொழி தெரிவிக்க முடியும்.
- தேவையற்ற நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் வரக்கூடிய அழைப்புக்களை தடை செய்ய முடியும்.
- நீங்கள் விரும்பும் நாளில் விரும்பும் நேரத்தில் விருப்பமான செய்தியை உங்களுக்கு விருப்பமான ஒரு நபருக்கு தானாக அனுப்பும் வசதி. (பிறந்தநாள் வாழ்த்து, புதுவருட வாழ்த்து, பண்டிகை வாழ்த்து போன்றவற்றை சரியான நேரத்தில் தெரிவிக்க இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.)
- ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்ப முடியும்.
- 16MB அளவுடைய வீடியோ ஒன்றுக்கு பதிலாக 50MB அளவுடைய வீடியோ கோப்புக்களை அனுப்பலாம். (உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலியில் ஆகக்கூடியது 16MB அளவுடைய வீடியோ கோப்புக்களை மாத்திரமே அனுப்ப முடியும்)
- புகைப்படங்களை அதன் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் உயர்ந்த தரத்திலேயே அனுப்ப முடியும்.
- 16MB அளவுடைய ஆடியோ ஒன்றுக்கு பதிலாக 100MB வரையான ஆடியோ கோப்புக்களையும் அனுப்பலாம்.
- நீங்கள் இறுதியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய நேரத்தை ஏனையவர்களால் அறிய முடியாதவாறு மறைக்கலாம்.
- ஜிபி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள DND (DO NOT DISTURB) எனும் வசதியை செயற்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் செய்திகள் உங்களுக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாம்.
- 100 க்கும் அதிகமான ஆவணங்களை ஒரே நேரத்தில் அனுப்பலாம். உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலியில் 30 மாத்திரமே முடியும்.
- வாட்ஸ்அப் குழுக்களின் (குரூப்) பெயரை 35 எழுத்துக்களை கொண்டு அமைக்கலாம். உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலியில் 25 எழுத்துக்களை மாத்திரமே பயன்படுத்த முடியும்.
- உங்கள் வாட்ஸ்அப் நிலைத்தகவலை (ஸ்டேட்டஸ்) 250 எழுத்துக்கள் வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
- ஏனையவர்களின் ஸ்டேட்டஸ் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை Copy செய்யலாம்.
- வாட்ஸ்அப் இல் உங்களுக்குத் தேவையான குழுக்களை அல்லது நபர்களை கடவுச்சொல் இட்டு மறைத்து வைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட வசதிகள் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான வசதிகளை இதில் பெற்றுக்கொள்ள முடியும். நீங்களும் இதனை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க:
டவுன்லோட் ஜிபி வாட்ஸ்அப்
நிறுவும்போது கவனிக்க வேண்டியது: (மேலதிக குறிப்பு)
நீங்கள் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் செயலிக்கு பதிலாக ஜிபி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த விரும்பினால் முதலில் உங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்அப் செய்து கொள்ளுங்கள். பின்னர் முன்னைய செயலியை நீக்கிவிட்டு ஜிபி வாட்ஸ்அப் செயலியை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது நீங்கள் ஏற்கனவே பேக்அப் செய்த செய்திகளை மீண்டும் ஜிபி வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment