ஆண்ட்ராய்டு போனை அதிகமானவர்கள் விரும்புவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவ்வாறான காரணங்களுள் “ஆண்ட்ராய்டு போனின் தோற்றத்தை எமது விருப்பம் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடிவதும்” ஒன்றாகும்.
ஆண்ட்ராய்டு போனின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு லாஞ்சர் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான லாஞ்சர் செயலிகளில் ஏபேக்ஸ் லாஞ்சர் செயலியும் சிறந்த ஒன்றாகும்.
இதனை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடிந்தாலும் கூட கட்டணம் செலுத்தி பெறப்படும் பதிப்பில் ஏராளமான பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகிறது.
650 இலங்கை ரூபா பெறுமதியான இதன் ப்ரோ பதிப்பு தற்பொழுது இலவசமாக வழங்கப்படுகின்றது. நீங்கள் இதன் இலவச பதிப்பை டவுன்லோட் செய்துகொண்ட பின்னர் அதன் செட்டிங்க்ஸ் பகுதியின் ஊடாக அதனை மிக இலகுவாக ப்ரோ பதிப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஏபேக்ஸ் (Apex) லாஞ்சர் செயலிக்கு என ஏராளமான தீம்கள் (Themes) கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ளன. இதனை Apex செட்டிங்க்ஸ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள Themes பகுதி மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கொண்ட செயலிகளை மறைத்து வைக்கவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.
அத்துடன் நவீன ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்படக் கூடிய ஜெஸ்ச்சர் (Gesture Support) வசதியையும் இந்த செயலியில் பெற முடிகிறது.
மேற்குறிப்பிட்ட ஒரு சில வசதிகள் தவிர இன்னும் ஏராளமான வசதிகளை இதில் பெற முடிகிறது. ப்ளே ஸ்டோரில் இருந்து 10 மில்லியன் தடவைகளுக்கும் மேல் டவுன்லோட் செய்யப்பட்டுள்ள இது 4.3 என்ற வாசகர் மதிப்பையும் பெற்றுள்ளது. விரும்பினால் நீங்களும் இதனை பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள்:
குறிப்பு: ஏபேக்ஸ் (Apex) லாஞ்சர் செயலியின் ப்ரோ பதிப்பு குறிப்பிட்ட காலத்திற்கே இலவசமாக வழங்கப்படுகின்றது. எனவே இதன் கால எல்லை முடியும் முன்னர் இதனை ப்ரோ பதிப்பிற்கு மேம்படுத்தி ஆயுள் முழுதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment