துருக்கியின் ''அய்வசிக்'' நகர கடற்கரையோரமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்றை கரையோரக் காவற்படை மீட்டுள்ளது. மிதவை இருக்கை ஒன்றில் கரையோரமாக இருந்த இந்த 10 மாதக் குழந்தை, அதனது பெற்றோருக்கு தெரியாமலேயே கடலின் அலைகளால் அடித்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்கள் இது கடலுக்குள் சென்று விட்டது.
Melda Ilgin என்னும் இந்தக் குழந்தை கடலில் மிதப்பதை பார்த்து காவலர்களிடம் ஏனையவர்கள் முறையிடும் வரை அதனது பெற்றோருக்கு அதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.
குழந்தையை கடலோரக் காவற்படையின் படகு மீட்டதும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

No comments:
Post a Comment