Social Icons

Wednesday, April 13, 2016

மொபைல் போன் மெமரி பற்றி இனி கவலைவேண்டாம்

தொகுப்பு: MJM Razan
உங்கள் போனின் மெமரியை முடிந்த வரை காலியாக வைத்திருப்பது போனுக்கு மிகவும் நல்லது. இதனால் உங்கள் போனில் நிறைய விஷயங்களை சேமித்து வைக்க முடியும். ஸ்டோரேஜ் நிரம்பி இருந்தால் உங்கள் போன் மெதுவாக செயல் படும். உங்களுக்கு அதிக இடமும் தேவைப்படும். உங்கள் போனின் மெமரியை நிர்ணயக்கும் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.


1.உங்களுக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கும் மெசேஜ்களை மட்டும் வைத்து மற்ற மெசேஜ்களை போனில் இருந்து அழித்து விடவும்.

2.கூகுள் போட்டோக்களுக்கு உங்கள் போட்டோ அப்லோடை ஆன் செய்யவும். இதனால் உங்களது எல்லா போட்டோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வை-பை அல்லது மொபைல் நெட்வொர்க் மூலமாக கூகுள் கணக்குக்கு சேமிக்கப் படுகின்றது. இதனால் போட்டோக்களை நீக்கினாலும் அவை முழுவதுமாக நீக்கப்படுவதில்லை.

3.உங்கள் போனின் ஸ்டோரேஜை செயல்படுத்தும் அடுத்த முக்கியமான செயல் எல்லா கோப்புகளையும் மைக்ரோ எஸ்டிக்கு மாற்றவும்.

4.தேவையற்ற பாடல்களையும் வீடியோக்களையும் நீக்கவும் இதனால் உங்கள் போனின் ஸ்டோரேஜ் காக்கப்படுகின்றது. இசை சேவைகளை பயன்படுத்தி பாடல்கள் மற்றும் வீடியோக்களை கேட்டும் கண்டும் மகிழுங்கள். தேவையற்ற இசை வீடியோக்களை போனில் இருந்து நீக்கி விடுங்கள்.

4.உயர்வரையறை போட்டோக்களை கிலிக் செய்வதால் ஸ்டோரேஜ் இடம் அதிக அளவில் நிரப்பப்படும். எனவே சாதாரணமான போட்டோக்களை எடுக்கவும்.

5.நீங்கள் க்ரோம் பிரவுஸர் பயன்படுத்தினால் கேச்சி, தரவு மற்றும் க்ரோம் பிரவுஸர் வரலாற்றை சுத்தம் செய்தல் அவசியம்.

6.சேமிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் போட்டோக்களை நீக்கவும் இவ்வகை போட்டோக்கள் அதிக அளவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஆகவே தரவுகளையும் டவுன்லோடையும் அதிமாக பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை நீக்கவும்.

7.இன் ஆப் டவுன்லோட்கள் உங்கள் ஸ்டோரேஜை அதிகப்படுத்தும். ஆகவே ஆஃப்லைன் யூட்யூப், பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நீக்கவும். ஆப்பிற்கு சென்று ஆஃப்லைன் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கி விடவும்.

8.தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கவும் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கி தேவையான ஆப்களை மட்டும் வைத்து கொள்ளவும். அதிக அளவில் ஆப்ஸ்களை சேமித்து வைத்தால் உங்கள் போனின் மெமரி காலியாகும்.

9மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை நீக்கவும் இவை உங்கள் போனை மெதுவாக செயல்பட வைக்கும். இதில் கேமரா ஆப்ஸ்கள் அடங்கும். உங்கள் போனின் கேமராவை கொண்டே நீங்கள் போட்டோ எடுக்க முடியும் என்பதால் அதற்கென எந்த செயலியும் டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை நீக்கி விடவும்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips