Social Icons

Wednesday, April 13, 2016

இன்டர்நெட்டில் கில்லியாக வேண்டுமா இதை ட்ரைபண்ணுங்க

தொகுப்பு: MJM Razan
உங்கள் பிரவுஸரை அப்கிரேட் செய்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். புதிய அம்சங்களை பெறுவது மற்றும் பழைய பிரச்சனைகளை தீர்க்க என அப்கிரேடு செய்வது இரு விதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றது. இதனால் சமீபத்திய வர்ஷனை அப்கிரேட் செய்து கொள்வது மிகவும் நல்லது. நீங்கள் பார்க்கும் சைட்களின் மூலம் பல குக்கீஸ்கள் உங்கள் வழியில் வரும். அவற்றை தேவையான போது அனுமதிக்கலாம். சில நேரங்களில் நீங்கள் அவற்றை அனுமதிக்காமல் விட்டு விட்டால் அந்த சைட்களை பார்வை இட முடியாது.


எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்குகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இண்டர்நெட்டில் பாதுகாப்பாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்கும்.

அதிக plugin அல்லது extensions நிறுவுவதால் நன்மை என்றாலும் சில பிரச்சனைகள் வருவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. பல டேப்களை திறந்து வைப்பது எப்பொழுதும் பிரச்சனைதான். ஆகையால் தேவையற்றதை நிறுவுவதை நிறுத்தினாலே இண்டர்நெட் பயன்பாடு நன்றாக இருக்கும்.

இண்டர்நெட் அனுபவத்தை சிறப்பாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்கள் பேருதவியாக இருக்கும். முடிந்த வரை இண்டர்நெட் பயன்படுத்தும் கருவியில் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் பயன்படுத்தலாம்.

வெளியிடங்களில் அவசர தேவைக்கென வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது பிரவுஸரில் இன்காங்நிட்டோ மோடு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் பயன்படுத்தியதற்கு எவ்வித தடயமும் அந்த கணினியில் இருக்காது.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips