Social Icons

Saturday, April 9, 2016

மொபைல்களை பற்றிய 20 ரகசியங்கள்

தொகுப்பு: MJM Razan
1.நோமோஃபோபியா செல்போன் இல்லாமல் மற்றும் அதில் சிக்னல் இல்லை என்றால் நோமோஃபோபியா ஏற்படும்.

2.கணினி அப்போலோ 11 செயற்கைகோள் நிலவில் தரையிறங்க பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட உங்களது மொபைல் போன் சக்தி வாய்ந்தது.



3.நோக்கியா 1100 சுமார் 250 மில்லியன் நோக்கியா 1100 கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வரை இந்தளவு விற்பனையை எந்த போனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4.ப்ரிட்டன் ப்ரிட்டன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 மொபைல் போன்கள் கழிவரைகளில் போட படுகின்றன.

5.கழிப்பறை உலகில் பெரும்பாலானோர் கழிப்பறைகளை விட மொபைல் போன்களை வைத்துள்ளனர்.

6.சீனா சீனாவில் மொபைல் போனில் இந்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கணினியில் பயன்படுத்துவோரை விட அதிகம்.

7.பேஸ்புக் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் அதிகப்படியான போட்டோ மற்றும் வீடியோக்கள் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இவை 27 சதவீத வெப் டிராபிக்கை எடுத்துக்கொள்கின்றது.

8.ஐபோன் சார்ஜ் ஆப்பிளின் ஐபோன் நாள் ஒன்றைக்கு முழுமையாக சார்ஜ் செய்தால் ஆண்டிற்கு 0.25 டாலர்கள் வரையிலான மின்சாரம் செலவாகும்.

9.செயலி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 65 சதவிதத்தினர் மாதம் முழுவதும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்வதில்லை.

10.மால்வேர் 99 சதவீத மால்வேர் தாக்குதல்களில் ஆன்டிராய்டு மட்டும் தான் குறி வைக்கப்படுகின்றன.

11.பாகங்கள் ஸ்மார்ட்போன் தயாரிக்க 250,000 தனித்தனி பாகங்கள் தேவைப்படுகின்றன.

12.அன்லாக் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றுக்கு 110 முறை தங்களது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்கின்றனர்.

13.ஆப்பிள் 2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 340,000 போன்களை விற்றுள்ளது.

14.பாக்டீரியா கழிவரை மூடிகளில் இருப்பதை விட 18 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருக்கின்றது.

15.ஜப்பான் ஜப்பானில் 90% போன்களில் வாட்டர் ப்ரூப் வசதி இருக்கின்றது, பெரும்பாலான ஜப்பானியர்கள் குளிக்கும் போதும் போன்களை பயன்படுத்துகின்றனர்.

16.மொபைல் மொபைல் போன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுகள் தூக்கமின்மை, தலை வலி மற்றும் குழப்பம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.

17.சார்ஜ் ஆராயச்சியாளர்கள் சிறுநீர் மூலம் மொபைல்களுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.

18.அழைப்பு மொபைல் போன் மூலம் முதன் முதலில் செய்யப்பட்ட அழைப்பு 1973 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது, இதை மேற்கொண்டவர் மார்டின் கூப்பர். இவர் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் நிறுவனர்.

19.ஆப்பிள் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பிடும் போது ஆப்பிளின் ஐபோன்கள் அதிகளவு விற்பனையாகின்றன.

20.விலை 1983 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன்கள் சுமார் 4000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips