Social Icons

Thursday, October 1, 2015

உள்ளங்கையில் ஒரு வழிகாட்டி!

தொகுப்பு: MJM Razan
உள்ளங்கைக்குள் உலகத்தையே அடக்கிவிட்டது செல்போன்கள். எந்த நாட்டில் இருப்பவர்களுடனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். தந்தியில் சொல்ல வேண்டிய செய்திகளை எஸ்.எம்.எஸ். மூலம் நொடியில் சொல்லி விடலாம். இது மட்டும்தான் செல்போன்களின் பயனா? இல்லை. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர வளர செல்போனுக்குள்ளும் பல வசதிகள் வந்துவிட்டன. அதில் முதன்மையானது அப்ளிகேஷன்ஸ்.
 இன்று ஆண்ட்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். எனவே அதற்கேற்ப நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அப்ளிகேஷன்களையும் உருவாக்கி வருகிறார்கள். இவற்றை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ். அந்த வகையில் மக்களுக்கு பயன்படும் சில அப்ளிகேஷன்ஸ் குறித்து பார்ப்போம். இது முழுமையான டேட்டா அல்ல.


மிரர் (Mirror)

மிரர் என்றால் கண்ணாடி. இந்த app பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பயன்படும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து கைபேசியையே கண்ணாடியாகவும் பயன்படுத்த முடியும். அதுதான் எல்லா மொபைலிலும் ஃபிரன்ட் கேமரா உள்ளதே... அதையே கண்ணாடி போல் பயன்படுத்திக் கொள்ளலாமே... என்று கேட்கிறீர்களா? மிரர் அதுக்கும் மேலே!

கண்ணுக்கு ஐலைனர் போட வேண்டும் என்றால், கண்களை மட்டும் ஜும் செய்து அழகாக ஐலைனர் வரையலாம். இதில் முகம் பார்க்கும் போது பளிச்சென்று இருக்கும். இந்த வசதி கேமராவில் கிடையாது!

எம்.பி.3 கட்டர் மற்றும் ரிங்டோன் மேக்கர் (MP3 Cutter and Ringtone Maker)

தினமும் புதுப் புது ரிங்டோன் வைப்பது இப்போது ஃபேஷனாகி விட்டது. பொதுவாக பாடலுக்கு இடையே வரும் இசையைதான் ரிங்டோனாக வைக்க பலரும் விரும்புகிறார்கள். சினிமா பாடலை டவுன்லோட் செய்து அதில் நமக்குப் பிடித்த இசையை மட்டும் கத்தரித்து ரிங்டோனாக அமைக்கத்தான் இந்த app. இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம். முதலில் பாடலை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு நாம் விரும்பும் இசை பகுதியை மட்டும் கத்தரிக்க வேண்டும்.

கிட்ஸ் கலரிங் ஃபன் (Kids Colouring Fun)

குழந்தைகளை எப்போது பிசியாக வைக்கும் app இது. குழந்தைகளுக்கு வண்ணங்களுடன் விளையாட பிடிக்கும். அவர்களுக்காகவே 200க்கும் மேற்பட்ட கலரிங் பக்கங்கள் இதில் உள்ளது. மிருகங்கள் முதல் ராஜகுமாரிகள் வரை 11 வித தீம்கள் கொண்ட கலரிங் பக்கங்கள் உள்ளன. ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்
படம் கொண்டு அழகிய அட்டைகளையும் இதில் உருவாக்க முடியும். பிரஷ், கிளிட்டர்ஸ், பேட்டர்ன்ஸ், சிறப்பு போட்டோ ஃபிரேம்கள் என குழந்தைகளை கவரும் வகையில் பல அம்சங்கள் இதில் உள்ளன.

மேத் டிரிக்ஸ் (Math Tricks)

கணிதம் எப்போதுமே சுவாரஸ்யமான பாடம். இதில் பல
தந்திரங்களை உருவாக்கி கணிதம் மூலம் அதை தீர்க்க கற்றுத் தரும் app இது. மட்டுமல்ல கணக்கை எளிதாக புரிந்து கொள்ளவும், விரைவாக கணக்கீடுகள் செய்ய கற்றுக் கொள்ளவும் இது பயன்படும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதவிகிதம், வாய்ப்பாடு... என பல வகையான கணக்கு தந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு தந்திரத்திலும் 15 லெவல்கள் இருக்கும். ஒரு லெவலை முடித்ததும் அதற்கான மதிப்பெண் வழங்கப்படும் என்பதால், குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம்.

ரெட்ரிகா (Retrica)

செல்ஃபி எடுப்பது இப்போதைய டிரண்ட். அப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றவர்களின் புகைப்படத்தை விட தனித்து இருக்க வேண்டாமா? உங்களின் மறக்க முடியாத தருணங்களை சிறப்பாக புகைப்படம் பிடிக்க உதவுவதுதான் ரெட்ரிகா. இதில் உள்ள பல வித சிறப்பம்சங்கள் உங்களின் புகைப்படத்துக்கு புது வித பரிணாமத்தை ஏற்படுத்தும். ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பே அது எப்படி இருக்கும் என்பதை முன்னோட்டமாக பார்க்கலாம். தவிர, கிளிக் செய்த புகைப்படங்களை கலை நயத்துடன் மாற்றி அமைக்கவும் முடியும். 100க்கும் மேற்பட்ட ஃபில்டர்கள், பிளர் எபெஃக்ட், வாட்டர் மார்க் விஜினேட், கொலாஜ்... என பல வித அம்சங்கள் இதில் உள்ளன.

கிரிக்கெட்பஸ் - கிரிக்கெட் கோர்ஸ் அண்ட் நியூஸ் (Cricketbuzz - Cricket Scores and News)

கிரிக்கெட் ரசிகர்களுக்கான சிறந்த app. இதை டவுன்லோட் செய்தால் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஸ்கோரை உடனுக்குடன் அறிய முடியும். சர்வதேச கிரிக்கெட், ஐசிசி வேர்ல்ட் கப், டி 20, சாம்பியன் லீக் டி 20, சிபிஎல் என எல்லா கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர்களையும் தெரிந்து கொள்ள முடியும். விரும்பும் மொழியிலும் லைவ் கமென்டும் படிக்கலாம். அடுத்த கிரிக்கெட் போட்டி எப்போது என்பது பற்றிய அறிவிப்பும் வரும். கிரிக்கெட் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், ஆட்டக்காரர்களின் பயோடேட்டா, டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் இதில் கண்டு மகிழலாம்.

மொபைல் லொகேஷன் டிராக்கர் (Mobile Location Tracker)

காலை முதல் மாலை வரை எங்கெங்கு சென்றீர்கள், எந்த நிமிடம் எந்த இடத்தில் இருந்தீர்கள்... என்பதை எல்லாம் தேதி, நேரத்துடன் காட்டும் app இது. ஜிபிஎஸ் இல்லாமல் கூட இது வேலை செய்யும். நம் வீட்டில் இருக்கும் நபர் எங்கு செல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரது செல்போனில் இந்த appபை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும். அதன் பிறகு அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஹிஸ்ட்ரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கணவரை கண்காணிக்க நினைக்கும் மனைவிகளுக்கு இது வரப்பிரசாதம்! தவிர, நாம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டால் போதும். முழு விலாசமும் அந்த இடத்தின் லேண்ட் மார்க்கும் நொடியில் வந்துவிடும்.

வாய்ஸ் சேஞ்சர் (Voice Changer)

உங்கள் குரலை மாற்றி பேசினால் எப்படி இருக்கும்? இதற்காக மிமிக்ரி பயிற்சி எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த appஐ கொண்டு சர்வ சாதாரணமாக நம்முடைய குரலை மாற்றி அமைக்கலாம். எப்படி? சிம்பிள். முதலில் நம்முடைய குரலில் ஏதாவது பேசி ரெக்கார்ட் செய்ய வேண்டும். பிறகு அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். அணில், மான்ஸ்டர், கோரஸ், அழகிய பெண் குரல், ஆண் குரல்... என பலவிதங்களில் கேட்டு மகிழலாம். பொழுது போகும்.
முக்கியமான விஷயம். இனி அறிமுகமில்லாத பெண்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால்... தேன் குரலில் மயங்கி இஷ்டத்துக்கு கடலை போடாதீர்கள். ஒருவேளை உங்களை கலாய்க்க இந்த app உதவியுடன் நண்பர்கள் யாராவது விளையாடலாம்!

இக்சிகோ ஃபிளைட் ஹோட்டல் பேக்கேஜ் (Ixigo Flight Hotel Package)

சுற்றுலா போக வேண்டுமா, எங்கு போவது, அதற்காக விமான கட்டணம், தங்குமிடம், செலவு எவ்வளவு ஆகும் என அனைத்தையும் பற்றி இந்த app உதவியுடன் தெரிந்துக் கொள்ளலாம். எந்த விமான கட்டணம் குறைவாக உள்ளது, நம் பட்ஜெட்டில் அடங்கக் கூடிய தங்குமிடம்-உணவகங்கள் பற்றிய விவரங்களும் இதில் கிடைக்கும். ஹோட்டலுக்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்து, பதிவும் செய்யலாம். தங்கும் இடம் எப்படி உள்ளது என்பதை குறிக்கும் புகைப்படங்களும், சுற்றிப்பார்க்க கூடிய இடங்கள் பற்றிய விவரங்களும் நொடியில் வந்து விடும். இந்தியாவை பற்றி மட்டும்தான் இதில் இருக்கும் என்று நினைக்காதீர்கள். உலகளவில் குறிப்புகள் உண்டு!

ராப்ஃட் (Raft)

சென்னையின் முக்கிய அடையாளம் போக்குவரத்து நெரிசல். அதுவும் அலுவலகம் - பள்ளி / கல்லூரிக்கு செல்லும் பீக் அவர்ஸ் என்றால் கேட்கவே வேண்டாம். சில சமயங்களில் லேசாக மழை பெய்தாலும், ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் அவசரமாக செல்லும் போது நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் போகலாம்.

அந்த பிரச்னையை இந்த app தவிர்க்கும். எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, அந்த வழியை தவிர்த்து வேறு எந்த வழியில் சுலபமாக செல்லலாம் என்று தெரிந்து கொள்ள முடியும். அதாவது, செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் போதும். அதுவே நெரிசல் இல்லாத பாதையை காண்பித்துவிடும். எல்லாவற்றையும் விட எந்த பேருந்து எந்த நிலையத்தில் எத்தனை மணிக்கு வரும் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கேப்ஸ் குரு (Cabs Guru)

சென்னையில் இப்போது ஒரு போன் செய்தால் போதும். வீட்டு வாசலில் டாக்சிகள் வந்து விடுகிறது. இந்த சேவையை பல நிறுவனங்கள் புரிவதால் யார் அந்த நேரத்துக்கு கிடைப்பார்கள் என்று தெரிந்து கொள்வது கடினம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் போன் செய்தால்தான் விவரம் கிடைக்கும். இந்த பிரச்னை இனி இல்லை.

கேப்ஸ் குரு மூலம் சென்னையில் உள்ள மிகப்பிரபலமான அனைத்து கால் டாக்சிகளின் விவரங்களையும் ஒரு கிளிக்கில் தெரிந்து கொள்ளலாம். சென்னை மட்டுமல்ல தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், பரோடா, சூரத், கோவா, நொய்டா, கஜியாபாத்... போன்ற நகரங்களில் உள்ள டாக்சிகளின் விவரங்களும் இந்த appல் உள்ளது. விலையும் ஒப்பிட்டு பார்த்து நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப புக் செய்யலாம் என்பது மிகப்பெரிய ப்ளஸ்.

இக்சிகோ (Ixigo)

ரயிலில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ள app. டிக்கெட் பதிவு செய்திருப்போம். ஆனால், அது காத்திருப்பு பட்டியலில் இருக்கலாம். இந்த app நமக்கு அப்டேட் செய்து கொண்டே இருக்கும். டென்ஷனை குறைக்கும். தவிர, இந்தியாவில் உள்ள பெரிய ஹோட்டல் முதல் பட்ஜெட் ஹோட்டல் வரையும் சுட்டிக் காட்டும். நாம் பயணப்படும் ரயில், எத்தனை மணிக்கு
கிளம்பும், எந்த ஸ்டேஷனில் நிற்கும் என ரயில் பயணம் பற்றிய அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைக்கும்.

சாவன் (Saavan)

இசை பிரியர்களுக்காகவே அமைக்கப்பட்டதுதான் சாவன். இதில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என அனைத்து பிராந்திய மொழி பாடல்களையும் கேட்டு மகிழலாம். தவிர கேட்கும் பாடல்களை நம்முடைய கைபேசியில் பதிவும் செய்து கொள்ளலாம்.

ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் (Automatic Call Recorder)

எந்த ஒரு போன் callலையும் பதிவு செய்ய கூடிய app இது. பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் இன்பாக்சை வந்தடையும். அவசியம் என்றால், கைபேசியின் மெமரி கார்டில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் மூன்று விதமான ஆப்ஷன்ஸ் உள்ளது. அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்யலாம். அல்லது எந்த அழைப்புகளையும் பதிவு செய்யாமலும் இருக்கலாம். குறிப்பிட்ட சில எண்களில் பேசுவதை மட்டும் பதிவு செய்யலாம். இளம் பெண்களுக்கு வரும் ராங்கால் தொல்லை பிரச்னைகளை இதன் மூலம் முடிவுக்கு கொண்டு வரமுடியும்.

ஷேர் இட் (Share It)

ஒரு கைபேசியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை ப்ளூ டூத் மூலமாகதான் மற்றொரு கைபேசிக்கு அனுப்ப முடியும். ஆனால், அப்படி அனுப்பும் போது சில சமயம் இரண்டு போன்களையும் இணைக்க முடியாது. அப்படியே இணைக்கப்பட்டு இருந்தாலும், ஒரு புகைப்படம் மாற்றலாக அதிக நேரம் ஆகும். அது வரை நாம் கைபேசியில் எந்த பயன்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. அந்த பிரச்னை இனி இல்லை. ஷேர் இட் மூலமாக பாடல், புகைப்படம், வீடியோ, சினிமா ஏன் மற்ற அப்ளிகேஷன்களை கூட நொடியில் அனுப்ப முடியும். தவிர பழைய தொலைபேசியில் இருக்கும் கான்டாக்ட்ஸ், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் இவற்றையும் புது தொலைபேசிக்கு சிரமம் இல்லாமல் மாற்ற முடியும். முக்கியமான விஷயம், டேப் (tab) மற்றும் கணினிக்கும் கைபேசியில் இருப்பதை அனுப்ப முடியும். இதற்கு கைபேசியில் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வைஃபை வசதியும் தேவையில்லை.

மெஹந்தி டிசைன்ஸ், மேக்கப் ஐடியாஸ் அண்ட் டியுரொரியல்ஸ் (Mehandi Designs, Makeup Ideas and Turorials)
இது முழுக்க பெண்களுக்கான app. கையில் மெஹந்தி மேக்கப் போட்டுக் கொள்ள எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். இதற்காக ஒவ்வொரு முறையும் பியூட்டி பார்லருக்கு போக முடியாது. வீட்டிலேயே நம்மை எப்படி அழகுப்படுத்திக் கொள்ளலாம் என்று இதில் படிப்படியாக சொல்லித் தருகிறார்கள். அதே போல் பல விதமான மெஹந்தி டிசைன்களும் இருப்பதால், நாம் விரும்பும் டிசைன்களை போட்டுக் கொள்ளலாம்.

5 மினிட்ஸ் டூ ஹெல்த் (5 mins to Health)

பலவித உடற்பயிற்சிகள், உணவு பழக்கவழக்கங்கள்
மற்றும் நடைப்பயிற்சிகளை விளக்கும் படங்கள் கொண்ட app. இதில் உள்ள உடற்பயிற்சிகளை தினமும் கடைபிடித்தாலே போதும், ஆரோக்கியமாக வாழ முடியும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உடல் ஆரோக்கியம் பற்றி சின்னச் சின்ன டிப்சும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள கலோரி மீட்டர் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரி விகிதங்களை குறிப்பிடும். அதை தெரிந்து கொண்டு கட்டுப்பாட்டுடன் சாப்பிடலாம். இதில் உள்ள கேள்வி பகுதி, ஆரோக்கியம் குறித்து நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும்.

இந்தியன் ரெசிபீஸ் (Indian Recepies)

சாம்பார், வத்தக் குழம்பு, பொரியல், வறுவல்... என்று
தினமும் சாப்பிட அலுப்பாக இருக்கும். புதிதுப் புதிதாக சாப்பிட சமையல் புத்தகங்கள் அல்லது இணையதளத்தை தேடி செல்ல வேண்டும். அந்த கவலை இனி வேண்டாம். இந்த appல் சைவம் - அசைவம் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரெசிபிக்கள் உள்ளன. எல்லாமே பிரபல சமையல்கலை வல்லுனர்களால் உருவாக்கப்பட்டவை. கூடவே டெசர்ட்ஸ், குளிர் பானங்கள், ஸ்னாக்ஸ்... ஆகியவற்றுக்கும் செய்முறை விளக்கங்கள் உண்டு. தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் எளிமையாக ரெசிபிகள் உள்ளன என்பது ப்ளஸ். மைக்ரோவேவ் உணவு வகைகள், கேக் வகைகள், பாகிஸ்தானி மற்றும் டயட் ரெசிபிகளும் இதில் அடங்கும்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips