Social Icons

Saturday, May 30, 2015

ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி

தொகுப்பு: MJM Razan
ஒரே நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஒரு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். தற்போது செல்போன்களில் பயன்பாடடில் இருப்பது லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகள். இந்த வகை பேட்டரிகளுக்குப் பதிலாக அலுமினியம் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் புதிதாக வடிவமைத்துள்ளனர். 


இதில் அதிவிரைவாக சார்ஜ் செய்ய முடியும். அத்துடன் இதில் தீப்பிடிப்பது போன்ற அபாயம் இருக்காது.


இந்த அலுமினியம் பேட்டரி மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் கெடுக்காது. இந்த வகை பேட்டரிகளை செல்போன் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் பயன்படுத்தலாம் என்று அந்த விஞ்ஞானிகள் குழு தலைவர் ஹாங்கி டாஸ்  தெரிவித்துள்ளார்.

இனி விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்போன்களுக்கு சார்ஜ்செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips