Social Icons

Tuesday, May 26, 2015

இறால் உருளைக்கிழங்கு கிரேவி

தொகுப்பு: MJM Razan
தேவையான பொருட்கள்
இறால் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டேபிள்ஸ்பூன்
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 11/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லிதழை – சிறிதளவு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – சிறிதளவு
எண்ணெய் – தாளிக்க


செய்முறை

*முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

*அதனுடன் மிளகாய் தூள்,சீராகத் தூள்,சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

*உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் நீக்கி நறுக்கி வைக்கவேண்டும்.

*வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும் .

*துருவிய தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

*வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின்பு கறிவேப்பிலை, சோம்பு, பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்.

*பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதுநேரம் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

*இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி நன்றாக வேகவிடவும்.

*நறுக்கிய உருளைக்கிழங்கை இந்த கலவையில் போட்டு வதக்கி லேசாக உப்பு சேர்க்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.

*10 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும்

*அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மூடிவிடவும்.

*சிறிது நேரத்தின் பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி சிறிது நேரம் மூடிவைக்கவும். சுவையான இறால் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips