Social Icons

Tuesday, May 26, 2015

சப்பாத்தி நூடுல்ஸ்

தொகுப்பு: MJM Razan
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 4
முட்டைக்கோஸ் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
கேரட் – 2 (நீளமாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 சிறியது (நீளமாக நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

*சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.



*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

*அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

*பிறகு குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

*பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி!!!










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips