Social Icons

Thursday, March 5, 2015

டைப்பிங் செயல்முறைக்கு பதிலாக கையெழுத்து கடிதங்களை அனுப்ப உதவும் ரோபோ

தொகுப்பு: MJM Razan
நாம் மின்னஞ்சல்கள், உரைகள் மற்றும் ட்வீட் செய்திகள் ஆகியவை தொகுக்க அதிக நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கறோம், இக்காலத்தில் கையெழுத்து கடிதங்கள் அரிதாகி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் தற்போது ஒரு விசித்திரமான திருப்பமாக, கையெழுத்து கலையை காப்பாற்ற டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட ரோபோ புதிதாக வந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ரோபோ உதவியுடன் எந்தவிதமான எழுத்துக்களையும் அதாவது, ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் படி எழுதும் செய்திகளை எழுத மேக்கர்பாட் 3டி பிரிண்டர்கள், மோண்ட்பிளாங்க் பேனாக்கள் மற்றும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது.

பாண்ட், ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் படி எழுதும் செய்திகள் உண்மையாக இருக்க திரவ இயக்கங்கள் மற்றும் மாறுபட்ட அழுத்தங்களை பயன்படுத்தி மனிதனின் கையெழுத்தை பின்பற்றியுள்ளது. மனிதனின் கையெழுத்தும், ரோபோவின் கையெழுத்தும் ஒப்பிட்டு பார்க்கும்போது எது போலியானவை என்று கண்டுபிடிப்பது கடினம் ஆகும் மற்றும் ஆயிரக்கணக்கான வழிகளில் எழுத்துக்களை ஒன்றாக இணைக்கவும் முடியும் என்றும் கருதப்படுகிறது. 

முதலில் யூசர்கள் தங்களின் கையெழுத்தின் சேம்பிளை(sample) ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். பின்பு பாண்ட் மென்பொருள், யூசர்கள் எந்த முறையில் ஒவ்வொரு அல்ஃபாபெட்டை(alphabet) எழுதினார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும். அதன் பிறகு யூசர்கள், பாண்டு வளைத்தளத்தில் இருந்து ஒரு காலி அட்டையை தேர்வு செய்து கொண்டு தாங்கள் என்ன அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை டைப் செய்து அனுப்ப வேண்டும். 11 பாண்டு ரோபோக்களில் ஒன்று 3டி பிரிண்டர் உதவியுடன் ஒரிஜினல் பெண் மூலம் அட்டையில் உரையை எழுதி மின்னஞ்சளுக்கு அனுப்பும். 

தற்போதைய பதிப்பான பாண்ட் கையெழுத்தின் ஸ்டைலை படிக்க வேண்டுமானால் $199 (£130) விலை கொடுக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு அட்டை விலை $2.99 (£1.90) ஆகும். இந்த தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதிலும் கிடைக்கின்றது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips