Social Icons

Thursday, March 5, 2015

உடல் ஊனமுற்றோர்களுக்காக உலகின் முதல் ஹேண்ட்ஸ் - ஃப்ரீ ஸ்மார்ட்போன் அறிமுகம்


தொகுப்பு: MJM Raz
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று, உடல் ஊனமுற்றோர்களுக்காக முற்றிலும் கைகள் உபயோகப்படுத்தாத (Hands-Free) உலகின் முதல் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது. ஸ்மார்ட்போனின் தொடக்க நிலை சீசேம் என்ற ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தி உருவாக்கப்பட்டது. கைகள் மற்றும் கால்களை பயன்படுத்த முடியாதவர்களும், முதுகு தண்டு காயங்கள், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (ALS), பெருமூளை வாதம் அல்லது மற்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய நிறுவனம் அறிவித்துள்ளது.

சீசேம் ஸ்மார்ட்போன் தனியுரிமை தலை-கண்காணிப்பு(proprietary head-tracking) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கம்புயூட்டர் விஷன் அல்கோரிதம் உள்ளது. மேலும், தொலைபேசியின் முன் எதிர்கொள்ளும் கேமராவில் யூசர்களின் தலை இயக்கங்களை கண்காணித்து, அவற்றை திரையில் உள்ள கர்சரை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. கர்சரில் விர்சுவல் ஃபிங்கர்(virtual finger) கொண்டுள்ளதால் மற்றவர்கள் வழக்கமான ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது போலவே இந்த ஸ்மார்ட்போனையும் பயன்படுத்த முடியும். 

$1,000 போனை சமீபத்தில் 'வெரிசோன் சக்திவாய்ந்த பதில்கள் 'விருது' மற்றும் $1 மில்லியன் (சுமார் ரூ.6 கோடி), பரிசு பணத்தை வெற்றி பெற்றது. 

திரையில் உள்ள கர்சர், யூசர்களின் தலை அசைவை பொருத்து அனைத்து அப்ளிக்கேஷனை செயல்படுத்த அனுமதிக்கிறது. அதாவது, டச், ஸ்வைப், ப்ரவுஸ், ப்ளே, டவுன்லோடு மற்றும் பல வசதிகளை செயல்படுத்தவும் முடியும். உண்மையான கைகள் இல்லாத அனுபவம் பெறவும், இந்த சாதனைத்தை அணுகவும், குரல் கட்டுப்பாடு கருவி இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த ஸ்மார்ட்போனை ஆன் செய்ய 'ஓபன் சீசேமி' என்று கூறினால் உடனே விழித்துக் கொண்டு தலை அசைவை கண்காணிக்க தொடங்கும்.





No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips