தொகுப்பு: MJM Razan
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்குவதாக கடந்த பிப்ரவரி
மாதமே அறிவித்தது. அப்போது சுமார் ரூ.1.14 லட்சம் கோடிக்கு வாங்குவதாக
கூறப்பட்டது. பின்னர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த மாத
துவக்கத்தில் வாட்ஸ் அப்பை ரூ.1.3 லட்சம் கோடியில் வாங்குவதாக ஒப்பந்தத்தை
பேஸ்புக் இறுதி செய்தது. மேலும், வாட்ஸ்-அப்பின் இணை நிறுவனர் ஜான் கோம்,
பேஸ்புக் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நடப்பு
ஆண்டின் முதல் 6 மாதங்களில் வாட்ஸ் அப்-க்கு ரூ.1,400 கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இதன் வருவாய் சுமார்
ரூ.90 கோடியாக இருந்துள்ளது.
வாட்ஸ் அப்பை பேஸ் புக் வாங்கியபோது,
தமது நிறுவனம் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு திரும்பும் என்று
எதிர்பார்ப்பதாக ஜான் கோம் கூறினார். ஏனெனில், பேஸ் புக் இந்த நிறுவனத்தை
வாங்குவதற்கு முன்னரே இதற்கான சோதனை முயற்சிகளில் வாட்ஸ் அப் ஈடுபட்டு
வந்தது. நீண்ட காலமாக நாங்கள் பேஸ்புக் ஆதரவில் இருப்பதற்கு முடியாது.
தற்போது, பயன்பாட்டாளர் எண்ணிக் கையை அதிகரிப்பதிலேயே நாங்கள் கவனம்
செலுத்துகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் 200 கோடியாக இந்த எண்ணிக்கை
அதிகரிக்கும். 5 ஆண்டுகளில் எங்களின் நிலை இதைவிட சிறப்பாக இருக்கும் என்று
அவர் தெரிவித்தார்.
ஆனால், விளம்பரம் மூலமான வருவாய் ஈட்டும்
திட்டத்தில் வாட்ஸ் அப் ஈடுபடவில்லை. பயன்பாட்டாளர்களுக்கு தொல்லை
அளிப்பதாக இருக்கும் என்பதால், முதல் ஆண்டு இலவச சேவையாகவும், பின்னர்
ஆண்டுக்கு சந்தா தொகையாக சுமார் ரூ.60 வாட்அப் வசூலிக்கிறது. வருவாய்
குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் கூறுகையில், ‘‘வாட்ஸ் அப் தக
வல் பரிமாற்ற சேவையை வர்த்தக ரீதியாக ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை’’
என்றார்.
No comments:
Post a Comment