ஒரு நாளில் இருக்கக்கூடிய 24 மணி நேரங்களில் ஒரு சில மணி நேரங்களை இன்று இணையத்துக்காக ஒதுக்க வேண்டிய தேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை எடுத்துப் பார்த்தால் பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இணையத்தளங்களுக்கு என நாம் அதிகமான நேரத்தை கொடுத்திருப்போம்.
எனவே எமது பொன்னான நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள இன்று பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் எமக்கு துணையாக நிற்கின்றன.
அந்தவகையில் யூடியூப் தளத்தில் நாம் எவ்வளவு நேரம் செலவழித்துள்ளோம் என்பதை அறிந்துகொள்ள யூடியூப் செயலியில் புதியதொரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவதன் மூலம் இந்த வசதியை உங்களாலும் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய இடுகை: யூடியூப் Incognito Mode வசதியை பயன்படுத்துவது எப்படி?
யூடியூப் தளத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்துள்ளீர்கள் என அறிவது எப்படி?
- முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் யூடியூப் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
- பின்னர் யூடியூப் செயலியை திறந்து அதன் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள உங்கள் கணக்கிற்கான லோகோ-ஐ சுட்டுக.
- இனி அங்கு காணப்படும் “Time Watched” என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் யூடியூப் தளத்தில் எவ்வளவு நேரம் செலவழித்துள்ளீர்கள் என்பதை அறியலாம்.
Time Watched பகுதியில் பின்வரும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
- குறிப்பிட்ட நாளில் யூடியூப் தளத்தை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தி உள்ளீர்கள்.
- முன்னைய நாள் (நேற்று) எவ்வளவு நேரம் யூடியூப் தளத்தை பயன்படுத்தினீர்கள்.
- கடந்த வாரம் எவ்வளவு நேரம் யூடியூப் தளத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்.
- சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் யூடியூப் தளத்தை பயன்படுத்துகிறீர்கள்.
No comments:
Post a Comment