Social Icons

Tuesday, April 5, 2016

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

தொகுப்பு: MJM Razan
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் முதல் நாள் இரவே, அடுத்த நாள் சமையலை அவர்களுடன் சேர்ந்தே திட்டமிடுங்கள். குளித்தல் உள்ளிட்ட அன்றாடக் கடமைகளைச் செய்து முடித்து, குழந்தைக்குப் பசித்த பிறகு உணவு தரலாம். வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். பாலுடன் கார்ன் ஃபிளேக்ஸ், அரை வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.


ஓட்ஸ் காய்கறி கலவை அல்லது தேன் கலந்த ஓட்ஸ், அரை ஆப்பிள் கொடுக்கலாம். ரவையுடன் முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்த கேசரி அல்லது பிரெட் சாண்ட்விச் அல்லது வெண்ணெய் தடவிய பிரெட் கொடுக்கலாம். இட்லிக்கு நிலக்கடலை சட்னி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, வேக வைத்த முட்டை, பன்னீர் டோக்ளா என எளிய உணவுகளை வித்தியாசமாகச் செய்யலாம். காலை உணவோடு ஒரு பழம் நல்லது!



சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். தனது பங்களிப்பை செலுத்தும் போது, அது தான் சமைத்த உணவு என்ற எண்ணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிடப் பழகும் குழந்தை. பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்து, வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.

காலை நேர டென்ஷனை தவிர்க்க இது உதவும். சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம். பெற்றோரும் சரிவிகித சத்துணவுக்கு மாறுவதே நல்லது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips