Social Icons

Sunday, January 10, 2016

வாய் துர்நாற்றமா அபோ இதை கண்டிப்பா படித்துவிட்டு:-ஷேர் செய்யுங்கள்

தொகுப்பு: MJM Razan
பல் வலியை சரிசெய்ய கூடியதும், வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும், பித்தத்தை சமன்படுத்த கூடியதும், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லதுமான காட்டு ஏலக்காய் குறித்து நாம் பார்ப்போம். ஏலத்தின் வகையை சேர்ந்தது காட்டு ஏலம். இது உள் உறுப்புகளை தூண்டக்கூடிய மருந்தாகிறது. வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.


ஏலக்காயை விட பெரியதான காட்டு ஏலக்காய் கருப்பு நிறத்தில் இருக்கும். இதை உடைத்தால்  கிடைக்கும் விதைகள் ஏல அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

காட்டு ஏலத்தை பயன்படுத்தி பல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும்.

ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும். இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.

காட்டு ஏலமானது வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்கும், நுண்நோய் கிருமிகளை அழிக்கும். வயிற்றில் புண் ஏற்படுவதால், வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். காட்டு ஏல அரிசியை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.

காட்டு ஏல அரிசி கால் ஸ்பூன், 4 லவங்கம், ஒரு துண்டு லவங்க பட்டை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாது. சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.  காட்டு ஏலத்தை பயன்படுத்தி பித்தத்தை சமன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் ஏல அரிசி, அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றில் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

இதனால் தலை சுற்றல், வாந்தி, குமட்டல்,பித்தத்தால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். காட்டு ஏல அரிசி நாளமில்லா சுரபிகளை தூண்டக்கூடியது. பித்த சமனியாக செயல்படுகிறது. ஏல அரிசியை வாயில் போட்டு மெல்லுவதால் துர்நாற்றம் போகும்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips