Social Icons

Monday, January 4, 2016

குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் Apps

 தொகுப்பு: M.M.M AJWATH
தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடித்து சொல்லிவிடும் இந்த மொபைல் 'Apps'. இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த 'ஆப்' 100-க்கும் மேற்பட்ட புதிதாய் பிறந்த குழந்தைகளின் அழுகையை பதிவு செய்திருக்கிறது.பல்வேறு நேரங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த 'Apps ' குழந்தை ஏன் அழுகிறது என்பதை தீர்மானிக்கிறது.


இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை சரியாக சொல்லிவிடும் இந்த 'Apps' 92 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது. The Infant Cries Translator என்ற இந்த 'Apps' ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.200-க்கு கிடைக்கிறது.

AJWATH










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips