Social Icons

Thursday, September 17, 2015

குல்கந்து ரவை அல்வா

தொகுப்பு: MJM Razan
நைஸ் ரவை – 1/2 கப்,
பால் – ஒன்றரை கப்,
சர்க்கரை – 1 கப்,
நெய் – 1/2 கப்,
குல்கந்து – 1/4 கப் (காதி கடைகளில் கிடைக்கும்),
பன்னீர் ரோஸ் பூக்கள் – சிறிது.
ரோஸ் கலர் எஸன்ஸ் – சிறிதளவு,
முந்திரி, உலர்ந்த திராட்சை,
பிஸ்தா, பாதாம் – தேவைக்கு.



வாணலியில் ரவையை நன்கு வறுக்கவும். காய்ச்சிய பாலில் சிறிதளவு எடுத்து அதில் ரவையை ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீதிப் பாலை கொதிக்கவிட்டு ஊற வைத்த ரவையை போட்டு கிளறவும். சர்க்கரை சேர்க்கவும். இத்துடன் நெய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர் சேர்த்து இறக்கி, அல்வா பதம் வரும்வரை கிளறவும். குல்கந்து மற்றும் ரோஸ் பூக்களின் இதழ்களை சேர்த்து, அதன் மேல் சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். சீவிய பிஸ்தா, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: ரோஜா குல்கந்து கிடைக்காவிடில் ரோஜாப் பூவின் 10, 15 இதழ்களை ஆய்ந்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சிறிது நெய் விட்டு வதக்கி சர்க்கரை, நெய் சேர்த்து கிளறி ஏலக்காய் தூள் சேர்க்கலாம். முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips