Social Icons

Sunday, August 9, 2015

நீங்கள் சிமாட் போன் பிரியரா?

தொகுப்பு: MJM Razan
இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன். நவீன செல்லிடப்பேசிகளான ‘ஸ்மார்ட் போன்’களை படுக்கைத் துணையாகக் கொண்டு உறங்குவதாக அண்மையில் மேற்கொள்ளபட்ட ஒரு சர்வதேச ஆய்வில் 74 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல்போய்விடுமோ என மனதளவில் பயப்படுவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக, 30 வயதுக்கு கீழ் உள்ள 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது சிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம். இதில், பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிஸ்கோ முதன்மை தொழில்நுட்ப அலுவலர், கெவின் பிளாக் கூறுகையில், ”ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர், ஒருவேளை அந்த போன் தொலைந்து போய்விட்டால், தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால், தங்களது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக பலர் கருதுகின்றனர்.

நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், ‘நோமோ போபியா’ என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில், ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, எஸ்.எம்.எஸ்  அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர்” என்றார்.

காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல், இரவு படுக்கப் போகும் வரை, தொலைபேசியே கதி என, ஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும் கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், “ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும், ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம். 10 நிமிடத்திற்கு ஒரு முறை, இவர்கள், தங்களது மொபைல் போனில், ஈமெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96 முறை சோதிக்கின்றனர்” என்றார்.

எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருப்பவர்கள், ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை எனப் பரபரக்கிறவர்கள். இத்தகைய ஸ்மார்ட் போன் அடிமைகளில் நீங்களும் ஒருவராகி விட்டீர்களா? இதைக் கண்டறிய எளிய முறை ஒன்று இருக்கிறது.

60 நொடிக்கு (ஒரு நிமிடம்) ஒரு முறை ஸ்மார்ட் போனைப் பார்க்கும் பழக்கம், டெம்பிள் ரன் அல்லது கேண்டி கிரஷ் போன்ற விளையாட்டுகளை அடிக்கடி விளையாடுவது, வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் தீவிரம் காட்டுவது, இயர்போன்களைப் பயன்படுத்துவது மற்றும் செல்பிக்களை எடுப்பதில் தணியாத தாகம் கொண்டிருப்பது ஆகிய ஐந்து பழக்கங்கள் இருந்தால் ஸ்மார்ட் போன் அடிமை என்று சொல்லலாம்.

இந்த அம்சங்கள் அனைத்தும் இருந்தாலும் உடனே கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இந்த ஐந்து அம்சப் பட்டியல் ஆய்வு அடிப்படையிலான முடிவு அல்ல; டெக் ஒன்  இணைய தளம் ஸ்மார்ட் போன் அடிமைகளைக் கண்டறியப் பட்டியலிட்டுள்ள அம்சங்களே இவை.

ஆனால், இந்தக் குறிப்புகளை அலட்சியமும் செய்ய வேண்டாம். கொஞ்சம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதும் நல்லது அல்லவா….










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips