Social Icons

Tuesday, August 11, 2015

தண்ணீரில் எரியும் விளக்கு - பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகள் சாதனை

தொகுப்பு: MJM Razan
சுடர் விடும் விளக்கை தண்ணீர் அணைத்துவிடும் என்னும் நிலைமாறி, தண்ணீரில் தெருவிளக்கை எரிய வைத்து சாதித்துள்ளார்கள் பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகள். சால்ட் எனும் நிறுவனத்தினர் இந்த விளக்கை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் உப்பு நீரில் இருந்து மின் அயனிகளைப் பெற்றுக் கொண்டு ஒளிரும் தெரு விளக்குகளை வடிவமைத்துள்ளனர். ஒரு லிட்டர் கடல் நீரில் இந்த விளக்கு 8 மணி நேரம் ஒளிரும். 6 மாதங்களுக்கு ஒரு முறை இதில் உள்ள மின்கடத்தியை பராமரிப்பு செய்து பயன்படுத்தலாம்.


பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான 7 ஆயிரம் தீவுகளில் பெரும்பாலான தீவுகளில் மின்வசதி இல்லை. அங்கு வசிப்பவர்கள் மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி மற்றும் பேட்டரி விளக்குகளை கொண்டே வெளிச்சம் பெறுகின்றனர். கடல்நீரை பயன்படுத்தி எரியும் விளக்குகள் அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வரச்செய்யும் என்று அந்த நிறுவனம் கூறி உள்ளது.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips